Sunday, December 3, 2017

செல்போனின் வைஃபை சிக்னல் கிளப்பிய பீதி.. பயந்து கொண்டு பாதியில் தரையிறக்கப்பட்ட விமானம்



இஸ்தான்புல்: செல்போன் வைஃபை சிக்னல் ஒன்றின் காரணமாக துருக்கி விமானம் ஒன்று பாதியில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது. அந்த வைஃபை சிக்னலின் பெயர் மூலம் விமானத்திற்கு குண்டு வெடிப்பு மிரட்டல் விடப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக அந்த விமானம் பாதியில் இறக்கப்பட்டு அனைவரும் சோதனை செய்யப்பட்டனர். ஒவ்வொருவரின் மொபைல் போனும் சோதனை செய்யப்பட்டது.

இந்த குண்டு வெடிப்பு மிரட்டல் அங்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. தற்போது இந்த செய்தி இணையம் முழுக்க வைரல் ஆகி இருக்கிறது.பாதியில் நிறுத்தப்பட்ட விமானம்
வெடிகுண்டு மிரட்டல் .

துருக்கியில் இருக்கும் நைரேலியில் இருந்து இஸ்தான்புல் நோக்கி அந்த விமானம் சென்று கொண்டு இருந்தது. திடீர் என்று பயணிகள் அனைவரும் விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது என்று கத்த தொடங்கி இருக்கின்றனர். இதையடுத்து விமானியும் உரிய அனுமதியுடன் விமானத்தை பாதி வழியில் இறக்கினார். விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
எப்படி நடந்தது
நடந்தது என்ன

இந்த நிலையில் அனைத்து பயணிகளும் இது குறித்து விமான அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதன்படி அந்த விமானத்தில் எதோ ஒரு நபரின் வைஃபை சிக்னலின் பெயர் ''விமானத்தில் பாம் இருக்கிறது'' என்று ஆங்கிலத்தில் இருந்துள்ளது. இதை பார்த்த பின்பே பயணிகள் வெடிகுண்டு என கத்தியிருக்கிறார்கள். மேலும் விமான பணி பெண்களும் அப்போது பயந்து கூச்சலிட்டுள்ளனர்.
சோதனை
அனைவரிடமும் சோதனை

இந்த நிலையில் இதுகுறித்து அனைத்து பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு பயணியின் செல்போனாக வாங்கி சோதனை செய்யப்பட்டது. மேலும் விமானம் முழுக்க வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டது. பின் விமானத்தில் வெடிகுண்டு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின் மீண்டும் விமானம் இஸ்தான்புல் நோக்கி புறப்பட்டது.
யார் செய்தது
யார் செய்த காரியம்

அந்த விமானத்தில் இருந்த பயணிகளிடம் சோதனை செய்யப்பட்ட போதே யார் இந்த செயலை செய்தது என்று அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நபரை அதிகாரிகள் மன்னித்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். அந்த மர்ம நபர் யார் என்று பயணிகள் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

source: oneindia.com
Dailyhunt

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...