Sunday, December 17, 2017

தொப்பிக்கு மேல் குக்கர்... ரண களத்திலும் கலகலக்கும் தினகரன் அடிப்பொடிகளின் ஓட்டு வேட்டை 
 
Posted By: Lakshmi Priya Updated: Sunday, December 17, 2017, 19:09 [IST]
 
சென்னை: ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா புகார்களுக்கு கிடையிலும் தினகரனின் அடிபொடிகளின் ஓட்டு வேட்டை கலகலப்பாக இருக்கிறது. ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முதல் பெரும்பாலான இடங்களில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார்கள் எழுந்தன.
 
 இன்றைய தினம் தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஆளும் கட்சி, தினகரன் அணி மீது புகார்கள் எழுந்தன. 
 
 A supporter of TTV Dinakaran campaigns with both of cap and cooker
இந்த ரணக்களத்திலும் ஆர்கே நகரில் பிரசாரத்துக்கு குறைவில்லாமல் களைகட்டி வருகிறது. ஆர்கே நகரில் தினகரனின் ஆதரவாளர் ஒருவர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் தலையில் குக்கரை தொப்பி போல் கவிழ்த்திருந்தார். இன்னும் உற்று பார்த்தபோது குக்கருக்கு அடியில் தொப்பியும் போட்டிருந்தார். குக்கர் சின்னம் தற்போதைய தேர்தலில் தினகரனுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தொப்பி சின்னமோ கடந்த ஏப்ரல் மாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் தேர்தலின் போது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த முறையும் தொப்பி சின்னம் கேட்டபோது அவருக்கு குக்கர் சின்னம்தான் கிடைத்துள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் தேர்தலே ரத்தாகும் என கூறப்படும் நிலையில் இதுபோல் சுவாரஸ்யமாக சிலர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது தொடர்கிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/a-supporter-ttv-dinakaran-campaigns-with-both-cap-cooker-305369.html

No comments:

Post a Comment

NMC took up 185 doc appeals, nixed 256 by patients in 5 yrs

NMC took up 185 doc appeals, nixed 256 by patients in  5 yrs  Ethics Board Says Non-Med Practitioners Can’t File Appeals  Rema.Nagarajan@tim...