Wednesday, December 27, 2017

மருத்துவ டிப்ளமோ நாளை கவுன்சிலிங்

Updated : டிச 27, 2017 04:53 |

சென்னை: துணை மருத்துவ டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான கவுன்சிலிங், நாளை(டிச.,28) துவங்குகிறது.

தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 7,000 துணை மருத்துவ டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. இவற்றில் சேர, 7,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான, தரவரிசை பட்டியல், www.tnhealth.org என்ற, இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்ககத்தில், நாளை நடைபெறுகிறது. இதையடுத்து, பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், ஜன., 4 முதல், 8 வரை, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 29.01.2026