Wednesday, February 14, 2018

அமைந்தகரை, சாலிகிராமம், தாம்பரம் அலுவலகங்களில் சிறப்பு பாஸ்போர்ட் மேளா



சாலிகிராமம், தாம்பரம், அமைந்தகரை ஆகிய இடங்களில் சிறப்பு பாஸ்போர்ட் மேளா 17–ந்தேதி நடக்க உள்ளது.

பிப்ரவரி 14, 2018, 04:15 AM

சென்னை,

மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–


‘சிறப்பு பாஸ்போர்ட் மேளா’ வருகிற 17–ந்தேதி நடக்க உள்ளது. சாலிகிராமம், தாம்பரம், அமைந்தகரை ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் பாஸ்போர்ட் சேவை அலுவலகங்கள் வருகிற 17–ந்தேதி வழக்கமான வேலை நாளாகவே இயங்கும். இந்த பாஸ்போர்ட் மேளாவில் பங்கு பெற, www.passportindia.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவு செய்து விண்ணப்ப பதிவு எண் பெற்று அதற்கான கட்டணத்தை செலுத்தி நேரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதில், பங்கு பெறும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவு எண், கொடுக்கப்பட்ட நேரம் ஆகியவற்றுக்கான நகல் மற்றும் தேவையான அனைத்து அசல் ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுக வேண்டும். புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பிப்பு (தட்கல்) உள்ளிட்டவைகளுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சிறப்பு பாஸ்போர்ட் மேளாவுக்கான நேர ஒதுக்கீடு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும். பதிவு செய்து நேரம் ஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். காவல்துறை அனுமதி சான்றிதழுக்கான விண்ணப்பங்கள், நிறுத்தி வைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் மறுக்கப்பட்ட டோக்கன்கள் மேளாவில் அனுமதிக்கப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...