Saturday, February 24, 2018

மின் கட்டண மையங்களில் இன்று பணம் செலுத்தலாம்

Added : பிப் 24, 2018 05:07

மின் வாரிய ஊழியர்களுக்கு, நான்காவது சனிக்கிழமை வார விடுமுறை என்ற அறிவிப்பு, அடுத்த மாதம் தான் அமலுக்கு வருகிறது. அதனால், மின் கட்டண மையங்கள் இன்று செயல்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்களுக்கு, தற்போது, மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை; மற்ற சனிக்கிழமைகள் வேலை நாளாகும். வங்கிகளுக்கு, நான்காவது சனிக்கிழமை விடுமுறை என்பதால், அன்றைய தினம், மின் கட்டண மையங்களில் வசூலாகும் பணத்தை, வங்கிகளில் செலுத்த முடிவதில்லை. இதையடுத்து, மின் வாரியத்திற்கு, நான்காவது சனிக்கிழமையும் விடுமுறை விடுவதற்கான அறிவிப்பை, மின் துறை அமைச்சர் தங்கமணி, நேற்று முன்தினம் வெளியிட்டார். இருப்பினும், இன்று மின் வாரிய அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும்.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக, ஓரிரு தினங்களில், வாரியத்தின் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்படும். அதன்பிறகே, மாதந்தோறும், நான்காவது சனிக்கிழமை விடுமுறை என்ற அறிவிப்பு, செயல்பாட்டிற்கு வரும். எனவே, இன்று நான்காவது சனிக்கிழமையாக இருந்தாலும், மின் கட்டண மையங்கள் மற்றும் மின் வாரிய பிரிவு அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும். அதனால், மின் கட்டணம் செலுத்த விரும்புவோர், இன்று செலுத்தலாம்.மின் வாரிய அலுவலகங்களின் பணி நேரம், காலை, 10:30 மணி முதல், மாலை, 5:00 மணி வரை. நான்காவது சனிக்கிழமை விடுமுறை விடப்படுவதால், மார்ச் முதல், மாலையில், கூடுதலாக, 15 நிமிடங்கள் அதாவது, 5:15 மணி வரை அலுவலகங்கள் செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...