Thursday, February 22, 2018

எம்.ஏ., படிப்பில் அரசு பெண் ஊழியர் மோசடி : தங்க பதக்கம் ரத்து; விசாரணைக்கு உத்தரவு

Added : பிப் 22, 2018 01:24


திருச்சி: அரசு பணியில் இருந்தபடியே, தினமும் கல்லுாரிக்கு சென்றதாக கூறி, முதுகலை பட்டம் பெற்ற பெண்ணுக்கு தங்கப்பதக்கம் மறுக்கப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்சி, பாரதிதாசன் பல்கலையில் நேற்று, பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், கவர்னர் பங்கேற்றதால், அவர் கையால் பட்டம் வாங்க இருந்த மாணவர்களைக் கொண்டு, நேற்று முன்தினம், பல்கலையின் பட்டமளிப்பு விழா அரங்கில் ஒத்திகை நடந்தது.இதில், சமஸ்கிருத பாடத்தில் முதலிடத்தில், எம்.ஏ., தேர்ச்சி பெற்று, தங்கப்பதக்கம் பெறவிருந்த ராஜகுமாரி என்ற பெண்ணும் பங்கேற்றார். இவர், தஞ்சை மாவட்டம், திருவையாறு ராஜாஸ் அரசு கல்லுாரியில், ரெகுலர் பாடப்பிரிவில் படித்து பட்டம் பெற்றுள்ளார்.ராஜகுமாரி, 2007 முதல், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், அலுவலராக பணியாற்றி வருவதாகவும், அவர் கல்லுாரிக்கு சென்றதாக, போலி வருகைப் பதிவேடு தாக்கல் செய்து, தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார் எனவும், பல்கலை பதிவாளர் கோபிநாத்துக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. இதையடுத்து, நேற்று ஒத்திகைக்கு வந்த ராஜகுமாரியிடம், பல்கலை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அவர், பல்கலையில் பணியாற்றுவது உறுதி செய்யப்பட்டது. அவர் பட்டமளிப்பு விழா ஒத்திகையில் பங்கேற்க வேண்டாம் எனவும், பட்டமளிப்பு தொடர்பான ஆவணங்களை அளித்து செல்லுமாறும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவரோ, தான் விடுமுறை எடுத்து படித்தேன் என, கூறியுள்ளார். ஆனால், ஆசிரியர் அல்லாத பணியாளர் அப்படி படிக்க வாய்ப்பில்லை என்பதால், அவரை அதிகாரிகள் வெளியேற்றி, அவர் வாங்க இருந்த தங்கப் பதக்கத்தையும் ரத்து செய்தனர். இதனால், ஆத்திரம்அடைந்த ராஜகுமாரி, உறவினர் ஒருவருடன் ரகளையில் ஈடுபட்டு, சென்று விட்டார்.

பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர், மணிசங்கர் கூறியதாவது: அந்த பெண் படித்த கல்லுாரியில், தவறு நடந்திருப்பதாக தெரிகிறது. உடனடியாக விசாரித்து, யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை, அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட, எம்.ஏ., பட்டம் நிறுத்தி வைக்கப்படும். அரசு பணியில் உள்ள அவர், இவ்வளவு நாட்கள் விடுமுறை எடுத்து, கல்லுாரியில் படித்திருக்க வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...