Sunday, February 25, 2018


நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்




நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். #ActressSridevi

பிப்ரவரி 25, 2018, 09:20 AM

புதுடெல்லி,

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து புகழ் பெற்ற நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க சென்ற போது நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் வழியே இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நடிகை ஸ்ரீதேவி மறைவு வருத்தம் அளிக்கிறது. திரைப்பட துறையில் மூத்த நடிகையான அவர், தனது நீண்ட கால திரை வாழ்க்கையில் பல்வேறு வேடங்கள் ஏற்றுள்ளதுடன், நினைவில் கொள்ள தக்க வகையிலான தனது நடிப்பினையும் வழங்கியுள்ளார்.

இந்த வேளையில் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் அவரது அன்புக்கு உரியவர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் ஆழட்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 11.01.2026