Thursday, February 1, 2018

அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகள் செல்லாது: குடும்ப அட்டைதாரர்களே வைத்துக் கொள்ளலாம்

By DIN | Published on : 01st February 2018 01:20 AM

கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகள் இனி செல்லாது. மின்னணு குடும்ப அட்டைகள் பெற்றுள்ள அனைவரும் தங்களிடம் உள்ள அச்சிடப்பட்ட பழைய அட்டைகளை அவர்கள் வசமே வைத்துக் கொள்ளலாம் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படுவதற்கு முன்பாக, சுமார் 2 கோடி அட்டைகள் புழக்கத்தில் இருந்தன. ஆதார் தகவல்களின் அடிப்படையில் மின்னணு குடும்ப அட்டைகள் தயாரிக்கப்பட்ட காரணத்தால் போலி குடும்ப அட்டைகள் பெருமளவு தவிர்க்கப்பட்டு வருகின்றன. இதனால், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையும் 1.94 கோடியாகக் குறைந்துள்ளது.
99 சதவீதப் பணிகள்: தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மின்னணு குடும்ப அட்டை கிடைக்கப் பெற்றவர்கள் ஏற்கெனவே தங்கள் வசம் வைத்துள்ள அச்சிடப்பட்ட குடும்ப அட்டைகளை என்ன செய்ய வேண்டுமென்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகள் அளித்த விளக்கம்:-

தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் மூலமாகவே நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வழங்கப்படும். மின்னணு குடும்ப அட்டைகளின் விவரங்களை நியாய விலைக் கடை பணியாளர்கள் அறிந்து கொள்ள தனித்துவமான கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், இயந்திரங்கள் பழுதானாலும் 10 சதவீதம் அளவுக்கு மாற்று இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்ட பிறகு, அவற்றின் மூலமாக மட்டுமே பொருள்கள் அளிக்கப்படும்.

எனவே, அச்சிடப்பட்ட பழைய குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருக்காது. அவை செல்லாது என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இந்த அட்டைகளை குடும்ப அட்டைதாரர்களே தங்கள் வசம் வைத்துக் கொள்ளலாம்.

முகவரி மற்றும் இருப்பிடச் சான்றுக்கான ஆவணமாக புதிதாக வழங்கப்பட்டுள்ள மின்னணு குடும்ப அட்டைகளையே காண்பிக்கலாம். மாநிலம் முழுவதும் இதுவரை 99 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள ஒரு சதவீதம் பேருக்கு விரைவில் வழங்கப்படும் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Subject: Completion of BCMET (Basic Course in Medical Education & Technology)-reg.

N-P050(20)/3/2024-PGMEB-NMC-Part(9) 1/3758365/2025 दूरभाष / Phone : 25367033, 25367035, 25367036 : 0091-11-25367024 फैक्स/Fax ई-मेल / E-mail...