Friday, February 23, 2018


சிபிஐ வலையில் சிக்கியது, சிறுமிகளை வைத்து ஆபாசப்படங்கள் எடுத்த வாட்ஸ் அப் கும்பல்

By DIN | Published on : 22nd February 2018 10:35 PM 




சிறுமிகளை வைத்து ஆபாசப்படங்கள் எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டு வந்த 119 பேர் கொண்ட பெரிய கும்பல் சிபிஐயில் சிக்கியுள்ளது. இந்த வாட்ஸ் அப் குரூப்பின் பிற நிர்வாகிகள் என்று சந்தேகிக்கப்படும் சத்யேந்திர சவுகான் நபீஸ் ரஸா மற்றும் சாகித் ஆதர்ஷ் ஆகியோரும் சிபிஐ வலையில் சிக்கியுள்ளனர்.

இலங்கை, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, மெக்சிகோ, நியூஸிலாந்து, சீனா, நைஜீரியா, பிரேசில், கென்யா ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்த வாட்ஸாப் குழுவில் அடங்குவர்.

இவர்கள் குறித்த தகவலும் அந்தந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026