Thursday, May 30, 2019

மருத்துவ மாணவர்கள் 107 பேர் தனியார் கல்லுாரிக்கு மாற்றம்

Added : மே 29, 2019 22:41

சென்னை, காஞ்சிபுரம், பொன்னையா ராமஜெயம் மருத்துவ கல்லுாரியில் படித்த, 107 மாணவர்கள், கவுன்சிலிங் வாயிலாக, தனியார் மருத்துவக் கல்லுாரிக்கு மாற்றப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம், மணமைநல்லுாரில், பொன்னையா ராமஜெயம் என்ற, தனியார் மருத்துவக் கல்லுாரி செயல்பட்டது. 

இந்திய மருத்துவ கவுன்சில் விதியை பின்பற்றாததால், கல்லுாரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.இதனால், 2016 - 17 கல்வியாண்டில், இக்கல்லுாரியில் சேர்ந்த, 108 மாணவர்களை, ஆறு தனியார் மருத்துவக் கல்லுாரிக்கு மாற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான கவுன்சிலிங், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவக் கல்வி இயக்குனரக அலுவலகத்தில், நேற்று நடந்தது;
107 மாணவர்கள் வந்திருந்தனர்; ஒரு மாணவி பங்கேற்வில்லை.இதில், 50 மாணவர்கள், சிதம்பரம், ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரிக்கும், 10 மாணவர்கள், மேல்மருவத்துார், ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரிக்கும் மாற்றப்பட்டனர். மற்றவர்கள், காஞ்சிபுரம், கற்பகவிநாயகா; கோவை, கற்பகம்; சென்னை, தாகூர்; மதுரை, வேலம்மாள் மருத்துவ கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டனர்.

No comments:

Post a Comment

5 tax mistakes new retirees should avoid

5 tax mistakes new retirees should avoid  These  can increase your tax liability and lead to penalties as well  Riju.Mehta@timesofindia.com ...