Thursday, July 11, 2019

4 லட்சம் கூடுதல் படுக்கைகள் அக்., முதல் கிடைக்கும்: கோயல்

Added : ஜூலை 11, 2019 06:13 |

புதுடில்லி,: 'பசுமை தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு மாறுவதன் மூலம், அக்டோபர் முதல், தினமும், 4 லட்சம், 'பெர்த்'கள் எனப்படும், படுக்கை இடங்கள், பயணியருக்கு கிடைக்கும்' என, ரயில்வே அறிவித்து உள்ளது.
இது பற்றி ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இப்போது, ஒவ்வொரு ரயில்களின் கடைசியிலும், மின்சாரம் வழங்கும், 'பவர் கார்' என, அழைக்கப்படும், இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. இதில், டீசல் மூலம், மின் உற்பத்தி செய்யப்பட்டு, ரயில் பெட்டிகளுக்கு வழங்கப்படுகிறது.'ஏசி' வசதியில்லாத பெட்டிகளுக்கு மின்சாரம் வழங்க, பவர் காருக்கு, ஒரு மணி நேரத்துக்கு, 40 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. ஏசி பெட்டிகள் என்றால், 65 - 70 லிட்டர் மின்சாரம் தேவைப்படுகிறது.ஒரு லிட்டர் டீசலுக்கு, 3 யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும். ஏசி வசதியில்லாத பெட்டிகளுக்கு, மணிக்கு, 120 யூனிட் மின்சாரம் தேவை.

இப்போது, உலக நாடுகள் பலவற்றிலும், ரயிலுக்கு மேல் செல்லும் மின்னழுத்த கம்பிகளிலிருந்து, மின்சாரம் பெறப்பட்டு, அது, ரயில் பெட்டிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.இந்த முறையில், சுற்றுச்சூழல் மாசடைவது குறைகிறது. ஏனெனில், இதில், காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படாது. இந்த முறைக்கு, ரயில் பெட்டிகள் மாற்றப்பட்டால், ரயில்வேக்கு, டீசல் செலவில், ஆண்டுக்கு, 6 ஆயிரம் கோடி ரூபாய்மிச்சமாகும்,இதனால், இந்த புதிய முறைக்கு, ரயில்களை மாற்ற முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.வரும் அக்டோபர் மாதம், 5 ஆயிரம் ரயில் பெட்டிகள், இந்த புதிய முறையில் இயக்கப்படும். இதனால், ரயில்களில், பவர் கார் இணைக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அதற்கு பதில் கூடுதல் பெட்டிகளை இணைக்கலாம்.அதனால், அக்டோபர் முதல், பயணியருக்கு தினமும், 4 லட்சம் படுக்கைகள் கூடுதலாக கிடைக்கும். இதனால், ரயில்வேக்கும் வருமானம் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தனியார்மயமாகாது

ரயில்வேயை தனியார்மயம் ஆக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதுவரை, எந்த பயணியர் ரயிலும், தனியார் இயக்க, ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு, ஏப்., 1ம் தேதி வரை, 21 ஆயிரத்து, 443 கி.மீ., துாரத்துக்கு, 189 புதிய ரயில் திட்டங்களின் பணிகள், பல்வேறு நிலைகளில் உள்ளன.பியுஷ் கோயல், ரயில்வே அமைச்சர்

2.94 லட்சம் காலி பணியிடங்கள்

''ரயில்வேயில் காலியாக உள்ள, 2.94 லட்சம் பணியிடங்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது,'' என, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, அவர் கூறியதாவது:ரயில்வேயில், ஜூன், 1ம் தேதி நிலவரப்படி, 2.98 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், 2.94 லட்சம் இடங்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது.பயிற்சியில் இருப்பவர்கள், விடுமுறையில் இருப்பவர்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, ஊழியர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஊழியர்கள் தேர்வில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, 10 சதவீதம் ஒதுக்கப்படும்.கடந்த, 1991ல், ரயில்வேயில், 16 லட்சத்து, 54 ஆயிரத்து, 985 பேர் பணியாற்றினர். 2019ல், 12 லட்சத்து, 40 ஆயிரத்து, 101 பேர் பணியாற்றுகின்றனர். ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது; ஆனால், ரயில் சேவையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,இவ்வாறு, அவர் கூறினார்.



No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...