Friday, December 20, 2019

'நோக்கியா சி - 1' அறிமுகம்



பதிவு செய்த நாள்19டிச 2019  00:00

அடிப்படை போனிலிருந்து, ஸ்மார்ட் போனுக்கு மாறுபவர்களுக்கு ஏற்ற வகையிலான குறைந்த விலை ஸ்மார்ட் போனை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது, 'எச்.எம்.டி.குளோபல்!'

அந்த வகையில் புதிதாக, 'நோக்கியா சி - 1' எனும் போனை அறிமுகம் செய்துள்ளது.

'ஆண்ட்ராய்டு பை கோ எடிசன்' இயங்குதளத்தில் செயல்படும் இந்த போனில், மிரட்டும்  அம்சங்கள் எதுவும் கிடையாது.

ஒரு ஜி.பி., ரேம், 2,500 எம்.ஏ.எச்., பேட்டரி, '3ஜி' இணைப்பு வசதி கொண்டது இந்த போன். கறுப்பு மற்றும் சிவப்பு வண்ணத்தில் அறிமுகம் ஆகியுள்ளது.
இரண்டு சிம் கார்டு வசதியுடன், 5.45 அங்குல திரை கொண்டது
இந்த போன். 16 ஜி.பி., நினைவகம், 5 எம்.பி., கேமரா உடன் வந்துள்ள இந்த போனின் எடை, 155 கிராம் மட்டுமே.

இதன் விலை: ரூ. 4,200

No comments:

Post a Comment

NEWS TODAY 8.4.2025