Saturday, December 21, 2019

ஊட்டியில் நடந்த உயர் கல்வி மாநாடு நிறைவு நான்காம் தலைமுறை கல்வி குறித்து முக்கிய முடிவு

Added : டிச 21, 2019 01:31


ஊட்டி :ஊட்டியில் நடந்த உயர் கல்வி மாநாடு நிறைவடைந்தது; நான்காம் தலைமுறை கல்வி குறித்த விவாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி கவர்னர் மாளிகையில், ராஜ் பவன் சென்னை மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சி ஆகியவை இணைந்து 'வேந்தரின் இலக்கு-2030 தொழில் துறை சகாப்தம்; 4.0 புதுமையான கல்வி முறை' என்ற தலைப்பிலான இரண்டு நாட்கள் நடந்த உயர் கல்வி மாநாடு நேற்று நிறைவடைந்தது.

இந்திய மேலாண்மை நிறுவன இயக்குனர், பீமராய் மேத்ரி கூறியதாவது :

உயர் கல்வி மாநாட்டில், 'நான்காவது தொழில் புரட்சி' என கூறப்படும் தொழில் முறையில் டிஜிட்டல்; தொழில் உற்பத்திக்கு தேவையான மனித வளம்; பல்கலைகழகங்கள் உருவாக்கும் கல்விமுறைக்கும் மாணவர்களின் திறனிற்கும் உள்ள இடைவெளியை ஆராய்ந்து அதற்கேற்ப கல்விமுறை மற்றும் பாடத்திட்டத்தினை உருவாக்குவதற்காக, பல்கலைகழக துணை வேந்தர்கள் மற்றும் இந்திய மேலாண்மை நிறுவன பேராசிரியர்கள் விவாதித்தனர். இதனால், நான்காம் தலைமுறை கல்வியில் (4.0) சிறப்பான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுள்ளன, என்றார்.

தேசிய கல்வி திட்டமிடல், நிர்வாக நிறுவனத்தின் பேராசிரியர் ராமசந்திரன்; ஜி.எஸ்.கே., கன்ஸ்யூமர் எல்த்கேர் தலைவர் தேவர்கனத்;முன்னாள் தலைமை செயலதிகாரி ரிச்சர்ட் ரேகி; துணை வேந்தர்கள் மற்றும் இந்திய மேலாண்மை நிறுவன பேராசிரியர்கள் பங்கேற்று கருத்துக்களை வழங்கினர்.
கவர்னர் எடுத்த முயற்சி!நான்காம் தலைமுறை கல்வி குறித்து பல்கலைகழக பாடத்திட்டத்தில் கட்டமைப்பு மாற்றங்களை கொண்டு வருதல் மற்றும் உத்திகளை மறு சீரமைத்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு, தேசிய அளவில் முதன்முறையாக நடக்கும், இந்த மாநாட்டை நடத்த, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முயற்சி மேற்கொண்டார். இதற்காக, ஏற்கனவே துணை வேந்தர்களுடன் ஆலோசித்து முடிவு செய்து, ஊட்டியில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்தார். இதற்கு பல்கலை., வேந்தர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...