Thursday, December 26, 2019

கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு மனைவி, மகள், மருமகள் போட்டி

Added : டிச 26, 2019 01:21

ராமநாதபுரம், : முதுகுளத்துார் ஒன்றியத்தில் இரண்டாம் கட்டமாக டிச.30ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. முதுகுளத்துார் தாலுகா பூசேரி கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. இவர் காங்., கிளை தலைவராக இருக்கிறார். இவரது மனைவி நீலாவதி 50, பூசேரி கிராம ஊராட்சித் தலைவருக்கு போட்டியிடுகிறார்.

அதே நேரம் அவரது மகள் இந்துமதி 32, அவரை எதிர்த்து போட்டியிடுகிறார். இதில் நீலாவதிக்கு ஏணி சின்னமும், மகள் இந்துமதிக்கு பூட்டு சாவி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மலைச்சாமியின் சகோதரர் மகனின் மனைவி பிரேமா 33, அப்பதவிக்கு போட்டியிடுகிறார்.

இது குறித்து மலைச்சாமி கூறுகையில், எனது மனைவியின் மனுவை வாபஸ் பெறுவதற்கு தாமதமாகிவிட்டது. மகள் இந்துமதிக்குதான் தற்போது ஆதரவு திரட்டி வருகிறேன், என்றார். ஒரே குடும்பத்தில் மூன்று பேர் ஒரே ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவது ராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தல் களத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

பாா்வை மாற வேண்டும்!

 பாா்வை மாற வேண்டும்!  ஒழுக்கம் என்று வரும்போதும் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரைகளை நாம் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. 14.04.2025 கோதை ...