Sunday, February 2, 2025

தணிக்கை துறை தலைமை இயக்குனர் ஆனந்த் பொறுப்பேற்பு


தணிக்கை துறை தலைமை இயக்குனர் ஆனந்த் பொறுப்பேற்பு

ADDED : பிப் 02, 2025 12:58 AM

சென்னை:சென்னையில் உள்ள இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின் தலைமை இயக்குனராக ஆனந்த் பொறுப்பேற்றார். இந்த பதவிக்கு முன், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் முதன்மை தலைமை கணக்காளர் தணிக்கை - 2 ஆக பதவி வகித்தார்.

மேலும், முதன்மை தலைமை கணக்காளர் தணிக்கை - 2 ஆக, கேரளா, வடகிழக்கு மாநிலங்கள், அசாம் மாநிலங்களிலும் பணிபுரிந்துள்ளார். ஆனந்த், 1994 சென்னை கால்நடை மருத்துவ கல்லுாரியில் பட்டம் பெற்றவர்.

அதேபோல, தமிழகம், புதுச்சேரி முதன்மை கணக்கு தணிக்கை அதிகாரியாக திருப்பதி வெங்கடசாமியும் பொறுப்பேற்றார்.

இதற்கு முன் அவர், சென்னையில் உள்ள மத்திய கணக்கு தணிக்கை அலுவலக தலைமை இயக்குனராகவும், மஹாராஷ்டிராவின் நாக்பூர் அலுவலகத்தில் தணிக்கை அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 31.01.2026