Friday, June 16, 2017

ரயில் நிலையம் தனியாருக்கு... தொடக்கப்புள்ளி


இந்திய ரயில்வே துறையை தனியார்மயப்படுத்த வேண்டும் என்கிற பேச்சு சில ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் ரயில்வேயின் நஷ்டம் குறைந்து, வருவாய் அதிகரிக்கும் என்கிறது அரசு. மேலும் நவீன கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடுகளையும் இதன் மூலம் திரட்ட முடியும் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால் தொழிற்சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ரயில்வேயை தனியார்மயமாக்கினால் அது பொதுச் சேவை துறையாக இயங்க முடியாது. இதனால் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட சுமைகள் மக்களுக்கு ஏற்படும் என்பது இவர்களது வாதம். இந்த நிலையில் கடந்த வாரத்தில் மத்திய அரசு தொடங்கியுள்ள ரயில் நிலைய தனியார்மயமாக்க திட்டம் ரயில்வே தனியார் மயத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது.
போபால் அருகில் உள்ள ஹபீப்கஞ்ச் நகர ரயில் நிலையம்தான் தற்போது தனியார் வசம் சென்றுள்ளது. இந்த ரயில் நிலையத்தை சர்வதேச தரத்துக்கு மாற்ற அந்த நகரத்தைச் சேர்ந்த பன்சால் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது மத்திய அரசு.

அரசு தனியார் கூட்டு திட்டத்தின் (PPP) அடிப்படையில் 8 ஆண்டுகளுக்கு இந்த ரயில் நிலையத்தை நிர்வகிக்கவும் செயல்படுத்தவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையத்துக்கு சொந்தமான 17,245 ச.மீ நிலமும் 45 ஆண்டு குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ.100 கோடியும், ரயில்வே நிலத்தை வர்த்தக ரீதியாக மேம்படுத்த கிட்டத்தட்ட ரூ.350 கோடியும் பன்சால் குழுமம் முதலீடு செய்ய உள்ளது.
உலக தரம் வாய்ந்த போக்குவரத்து மையம், ஷாப்பிங் மால், உணவகங்கள், பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளை இந்த நிறுவனம் அமைத்து அதை நிர்வகிக்க உள்ளது. சோலார் எனர்ஜி உள்ளிட்ட பல கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.

முக்கியமாக ஆபத்து காலத்தில் நான்கு நிமிடங்களில் ரயில் நிலையத்தை விட்டு பயணிகள் வெளியே செல்வதற்கான வசதிகளும் உருவாக்கப்பட உள்ளன.
இந்த ரயில் நிலையத்தைத் தொடர்ந்து ஆனந்த் விஹார், பிரிஜ்வாசன், சண்டீகர், காந்தி நகர், சிவாஜிநகர் மற்றும் புணே ரயில் நிலையங்களை தனியார் வசம் அளிப்பதற்கான முனைப்புகளிலும் ரயில் நிலைய மேம்பாட்டு ஆணைய நிறுவனம் இறங்கியுள்ளது.

ரயில் நிலைய தனியார் மயமாக்கம், இந்திய ரயில் போக்குவரத்தில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதே உண்மை. இனி வரும் நாட்களில் ரயில்வேயில் அடுத்தடுத்த மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அதன் தொடக்கப்புள்ளிதான் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம்.

வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம்: மத்திய அரசு

பிடிஐ

வங்கிகளில் கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயமக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகள் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய வருவாய்த் துறை இதுதொடர்பான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோதே ஆதார் எண்ணுடன் - பான் எண்ணை இணைப்பது அவசியமாவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஒரே நபர் பல பான் அட்டைகளைப் பெற்று வரி ஏய்ப்பு செய்வதைத் தடுப்பதற்காக ஆதார் - பான் இணைப்பை கட்டாயமாக்குவதாக அரசு கூறியிருந்தது.

இந்நிலையில் தற்போது வங்கிக் கணக்கை தொடங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்கி அறிவித்துள்ளது.

அதேபோல், ரூ.50,000-க்கும் மேலான அனைத்து பணப் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் எண்ணைத் தெரிவிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பாணை அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதன்படி ஆதார் எண்ணைத் தெரிவிக்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் டிசம்பர் 31 2017-டன் முடக்க அறிவுறுத்துயுள்ளதாகவும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணை அனைத்து சேவைகளுக்கும் பயன்படுத்துவதை கட்டாயமாக்குவதை எதிர்த்து வாதவிவாதங்கள் எழுந்துவரும் நிலையில் மத்திய அரசு ஆதார் தொடர்பான இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

High Court directs Dr. Ambedkar Law University to produce resolution

University syndicate reportedly passed it for reducing student intake

The Madras High Court Bench here on Thursday ordered production of a resolution reportedly passed by the syndicate of Tamil Nadu Dr. Ambedkar Law University on March 27 for reducing the intake of students from 180 to 104 for various courses offered by its School of Excellence in Law due to absence of adequate infrastructure.
Justices A. Selvam and N. Authinathan gave the direction on a public interest litigation petition accusing N. Santhosh Kumar, the incumbent convenor of the university, of having reduced the intake by misleading the Syndicate with the intention of spoiling initiatives taken by former Vice-Chancellor P. Vanangamudi to admit more students.
“Naive claim”
Contesting the case, university’s counsel V. Meenakshisundaram told the high court bench that it was naive to claim that the Syndicate had been misled by the convenor since it comprised eminent personalities, including a sitting judge of the High Court.
“The decision was of the Syndicate, the highest decision making body of the university, not of the convenor,” Mr. Meenakshisundaram told the court.
Infrastructure problem
When the judges asked why at all did the Syndicate decide to reduce the intake much to the disadvantage of students who preferred to study law, the university counsel said it was because of unavailability of infrastructure to accommodate many students and the lack of funds to create the required infrastructure before the beginning of the academic year.
Wondering how could the mighty State cite lack of funds as a reason to reduce the intake of students in a government institution, the judges ordered production of the Syndicate resolution by next week.
The high court bench also took note of the submission of petitioner’s counsel R. Alagumani that private universities in the State charged heavily for law courses.

Varsity inks pact with firm

Sathyabama University has signed an agreement with GE Healthcare to augment students’ skills and bridge the industry-academia gap. A GE-Sathyabama Centre of Academic Excellence is proposed to be jointly set up to offer the courses that will include classroom training and interactive hands-on training. Maneesh Pherwani, general manager, education South Asia, GE Healthcare, said the collaboration will address the existing skill gap and create a meaningful and sustainable impact.
Mariazeena Johnson, Pro-Chancellor of Sathyabama University, Marie Johnson, Vice President, GE Healthcare, were present.

deepavali advance booking


தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஜூன் 18-ம் தேதி முதல் தொடங்கும்: தெற்கு ரயில்வே

By DIN  |   Published on : 15th June 2017 09:36 PM  |   
சென்னை:  ஜூன் 18-ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எழும்பூர், சென்ட்ரல், ரயில் நிலையில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் தீபாவளி சிறப்பு ரயில்கள், கூடுதல் ரயில்கள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

போலி ஜாதிச் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தவர்களை நீக்குங்கள்: மத்திய அரசு உத்தரவு

By DIN  |   Published on : 16th June 2017 04:51 AM  |   
அரசின் பல்வேறு துறைகளில் போலி ஜாதிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து பணியில் சேர்ந்தவர்களை பணிநீக்கம் செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
போலி ஜாதிச் சான்றிதழ் சமர்ப்பித்து பணிக்குச் சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து அனுப்புமாறு மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசின் பொதுத் துறை நிறுவனங்களில், 1,800-க்கும் மேற்பட்டோர் போலி ஜாதிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து பணிக்குச் சேர்ந்துள்ளதாக, அதிகாரப்பூர்வத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதனடிப்படையில், இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அண்மையில் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போதைய விதிகளின்படி, அரசு ஊழியர் ஒருவர், தவறான தகவலை அல்லது போலியான சான்றிதழை சமர்ப்பித்து பணிக்கு சேர்ந்தது, பணி நியமனம் செய்த நிர்வாகத்துக்குத் தெரியவந்தால், அவரைப் பணியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.
எனவே, மத்திய அரசின் அனைத்து துறைகளும், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் காலியாக இருந்த தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பணியிடங்களுக்கு, போலி ஜாதிச் சான்றிதழ் சமர்ப்பித்து சேர்ந்துள்ளார்களா என்ற விவரங்களை சேகரிக்கவும். அந்த விவரங்களை தங்களது துறைகளுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில், 1,832 பேர் போலி ஜாதிச் சான்றிதழ்களை சமர்ப்பித்துப் பணிக்குச் சேந்திருப்பதாக மத்தியப் பணியாளர், பயிற்சித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், மக்களவையில் கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் கூறியிருந்ததாவது: மொத்தமுள்ள 1,832 பேரில் 276 பேர் பணிநீக்கம் அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 521 பேர் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எஞ்சிய 1,035 பேர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவர்களில் 1,296 பேர், வங்கிச் சேவைத் துறைகளில் போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து பணிக்குச் சேர்ந்துள்ளனர் என்று ஜிதேந்திர சிங் கூறியிருந்தார்.



இருவழி திட்டம் முழுமை பெறுவதில் தாமதம்
நிலம் கையகப்படுத்துவதில் தொடரும் சிக்கல்


விழுப்புரம் - திண்டுக்கல் இருவழிப் பாதை திட்டத்தில், திருச்சி வரை பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், விவசாய நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் நீடிப்பதால், திட்டம் முழுமை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.



தென்மாவட்ட பயணிகள் நலன் கருதி, செங்கல்பட்டு துவங்கி, திண்டுக்கல் வரை, இருவழி ரயில் பாதை அமைப்பதற்கு, ரயில்வே நிர்வாகம் தீர்மானித்தது. முதல் கட்டமாக, செங்கல்பட்டு - விழுப்புரம் இடையே புதிய பாதை அமைக்கப்பட்டு, ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அடுத்ததாக, விழுப்புரம் - திண்டுக்கல் இடையே, 281 கி.மீ.,க்கு இருவழி பாதை அமைக்கும் பணியை, 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்.வி.எஸ்.எல்.,) நிர்வாகம், 2011ல் துவங்கியது. திருச்சி ரயில்வே கோட்டத்தில், விழுப்புரம் - திருச்சி இடையே, 178 கி.மீ.,க்கு, ஏழு கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

பணிகள் முடிந்து, மே 23 முதல், புதிய இருவழிப் பாதையில் ரயில்கள் இயக்கப்படு கின்றன. இதன்மூலம், செங்கல்பட்டு - திருச்சி வரை, இருவழி ரயில் பாதை திட்டம் நிறைவடைந்துள்ளது.திருச்சி - திண்டுக்கல் மார்க்கத்தில், மணப்பாறை - தாமரைப்பாடி இடையேயான 48 கி.மீ.,யில்; மணப்பாறை - கல்பட்டிசத்திரம், 26 கி.மீ., பணிகள் நிறை வடைந்து விட்டன.

ஆனால், கல்பட்டிசத்திரம் - தாமரைப்பாடி இடையிலான, 22 கி.மீ., பணிகள், விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான பிரச்னையால், துவங்கிய நிலையிலேயே தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இது குறித்து, வடமதுரை விவசாயிகள் சங்க பிரதிநிதி ஆனந்தகுமார் கூறியதாவது:

கல்பட்டிசத்திரம் - தாமரைப்பாடி இடையே, ரயில் பாதைக்கு கையகப்படுத்திய நிலத்திற்கு, விவசாயி களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப் படவில்லை. கடந்த, 2013ல், அப்போதைய காங்., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின் படி, மார்க் கெட் மதிப்பில், நிலத்திற்கு இழப்பீடு தர வேண்டும் எனக் கோரி வருகிறோம்.

இதை, மாநில அரசு தர மறுப்பதால்,இங்கு ரயில்வே பணிகளை துவக்க விடாமல் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளோம். இரண்டு வாரங்களுக்கு முன், திண்டுக்கல், டி.ஆர்.ஓ., வேலு தலைமையில் பேச்சு நடந்தது. முதல்கட்டமாக, பட்டா நிலத்தில் அகற்றப்பட்ட மரங்களுக்கு இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தனர்.

இந்த இழப்பீடு, விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் என்பதால், விவசாய நிலங்களுடன் மொத்தமாக இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்மானித்து, பேச்சுவார்த்தையை புறக்கணித்து விட்டோம். கடந்த காங்., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மார்க்கெட் மதிப்பு தொகையை வழங்கி னால் மட்டுமே, ரயில்வே பணியை துவங்க விடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான பிரச்னையில் இழுபறி நீட்டிப்பதால், இருவழி ரயில் பாதை திட்டம் முழுமை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, திண்டுக் கல் மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி, விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, ரயில் பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

நில இழப்பீடு வழங்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு

ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இருவழிப் பாதை பணியை, 2017 மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டோம். விழுப்புரம் - திருச்சி வரை அனைத்து பணி களும் முடிந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம், சென்னையில் இருந்து, திருச்சி வரை, கிராசிங் பிரச்னை இல்லாமல் எதிரெதிர் திசையில் ரயில்கள் இயங்கும்.'மணப்பாறை - கல்பட்டிசத்திரம் வரை பணி முடிந்து, சோதனை ஓட்டமும் முடிந்து விட் டது.

ஆனால், கல்பட்டிசத்திரம் - தாமரைப்பாடி இடையே, 22 கி.மீ.,ல், ஆங் காங்கே விவசாயி கள் பிரச்னையால் பணிகள் துவங்க முடியாத நிலை உள்ளது.

'மணப்பாறை - கல்பட்டிசத்திரம் வரை பணி முடிந்து, சோதனை ஓட்டமும் முடிந்து விட் டது. ஆனால், கல்பட்டிசத்திரம் - தாமரைப்பாடி இடையே, 22 கி.மீ.,ல், ஆங்காங்கே விவசாயி கள் பிரச்னையால் பணிகள் துவங்க முடியாத நிலை உள்ளது.
'மணப்பாறை - கல்பட்டிசத்திரம் வரை பணி முடிந்து, சோதனை ஓட்டமும் முடிந்து விட் டது. ஆனால், கல்பட்டிசத்திரம் - தாமரைப்பாடி இடையே, 22 கி.மீ.,ல், ஆங் காங்கே விவசாயி கள் பிரச்னையால் பணிகள் துவங்க முடியாத நிலை உள்ளது. 'விவசாயி களுக்கு இழப்பீடு வழங்க, 6 கோடி ரூபாய் டிபாசிட் செய்து விட்டோம். இனி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பணிகள் முடியும்' என்றார்.

அறிக்கை தர உத்தரவு

திண்டுக்கல், டி.ஆர்.ஓ., வேலு கூறுகையில், ''விவசாயிகள், 2013ல் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தின்படி, விவசாய நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை கேட்கின்றனர். ஆனால், தொழில்துறை சட்டத்தின்படியே இழப்பீடு தர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

''இதுதொடர்பாக, திண்டுக்கல் மற்றும் பழநி சப்-கலெக்டர்கள் மூலம் விசாரணை நடத்தி, அறிக்கை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள் ளது. நில எடுப்பு பணிகளை துரிதப்படுத்தி, இருவழி ரயில் பாதை திட்டம் விரைந்து முடிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

- நமது நிருபர் -

வரி பிடித்தம் செய்த வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு

பதிவு செய்த நாள்16ஜூன்2017 00:05

சென்னை:நிரந்தர வைப்பு தொகைக்கு, கூடுதலாக வரி பிடித்தம் செய்த வங்கி, இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையை சேர்ந்த முருகேசன் தாக்கல் செய்த மனு:சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில், எனக்கு சேமிப்பு கணக்கு உள்ளது. இத்துடன், என் பெயரில், ஏழு நிரந்தர வைப்பு தொகை கணக்குகளும் உள்ளன. இந்த கணக்குகளுக்கு கிடைக்கும் வட்டி வருவாயில், கூடுதலாக, 7,168 ரூபாய், வரி பிடித்தம் செய்யப்பட்டது.கூடுதலாக பிடித்தம் செய்த தொகையை, என் கணக்கில் வரவு வைக்க கோரினேன்; வங்கிமறுத்துவிட்டது. பிடித்தம் செய்யப்பட்ட தொகையுடன், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

வழக்கு விசாரணையில், 'வங்கியின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, உரிய சேவை வழங்கப்பட்டு உள்ளது. தங்கள் தரப்பில் தவறில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, வங்கி வாதிட்டது.இந்த வழக்கில், நீதிபதி ஜெயபாலன், நீதித்துறை உறுப்பினர் கலையரசி பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் சமர்ப்பித்த ஆவணங்களை பார்க்கும் போது, வங்கி சேவையில் குறைபாடு உள்ளது. பிடித்தம் செய்யப்பட்ட, 7,168 ரூபாய் மனுதாரருக்கு வழங்குவதுடன், இழப்பீடாக, 5,000 ரூபாயும், வழக்கு செலவு, 5,000 ரூபாயும், வங்கி நிர்வாகம், ஆறு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா : அறிவித்த அரசு டாக்டருக்கு சிக்கல்
பதிவு செய்த நாள்15ஜூன்2017 23:13

சென்னை: 'கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிவித்த, அரசு டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, அரசு தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உதவி பேராசிரியர், டாக்டர் தண்டபாணி. இவர், தான் நடத்தி வரும் ஸ்கேன் மையத்தில், கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை, சட்ட விதிகளை மீறி தெரிவித்து, கூடுதல் பணம் வசூலிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பான புகாரை அடுத்து, காளையார்கோவிலில் உள்ள, அவரது ஸ்கேன் மையத்தில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரக அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர்.

இது குறித்து, ஊரக நலப்பணிகள் இயக்க அதிகாரிகள் கூறியதாவது: டாக்டர் தண்டபாணி நீண்ட விடுப்பில் உள்ளார். அவரது ஸ்கேன் மையத்தில், கூடுதல் பணம் பெற்று, கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கூறியது, நிரூபணமாகி உள்ளது. 

இதையடுத்து, மையத்தில் இருந்த பரிசோதனை கருவிகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர் மீது, பாலின தேர்வு தடை செய்தல் சட்டத்தின் படி, குற்றப்பத்திரிகை தயாராகி வருகிறது.

ஓரிரு நாட்களில், சிவகங்கை மாஜிஸ்திரேட் முன், தாக்கல் செய்யப்படும். பின், அவர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ கவுன்சில் பதிவில் இருந்தும் அவரது பெயர் நீக்கப்படும் என்பதால், மருத்துவம் பார்க்க முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீட்'டில் 29 வகை வினாத்தாள்: குறிப்பில் தகவல்

பதிவு செய்த நாள்15ஜூன்2017 20:36

மருத்துவ சேர்க்கைக்கான, 'நீட்' நுழைவு தேர்வில், 29 வகை வினாத்தாள்களுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. அனைத்து மாநிலங்களிலும், மத்திய, மாநில அரசு ஒதுக்கீட்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்பில் சேர, 'நீட்' தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், அனைத்து மாநிலங்களிலும், 'நீட்' தேர்வு அறிமுகமாகியுள்ளது. மே, 7ல் நடந்த, 'நீட்' தேர்வில், தேர்வர்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதேபோல், நாடு முழுவதும், ஒரே வகை வினாத்தாள் இல்லை என்றும் புகார் எழுந்தது.
இந்நிலையில், வினாத்தாளுக்கான விடைக்குறிப்பு, நேற்று சி.பி.எஸ்.இ.,யின், http://cbseneet.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில், 29 வகை வினாத்தாள்களுக்கான, விடைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மொத்தம், 180 வினாக்களுக்கு, விடைகள் உள்ளன. இவற்றை தேர்வர்கள் பார்த்து, விடையில் மாற்றம் இருந்தால், உரிய ஆதாரத்துடன், இன்று மாலை, 5:00 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துஉள்ளது.

-நமது நிருபர் -
கிராம மருத்துவமனைகளுக்கு செல்ல டாக்டர்கள் மறுப்பு : சட்டசபையில் அமைச்சர் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள்15ஜூன்2017 23:53

பெங்களூரு: “கிராமப்பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, சிறப்பு டாக்டர்கள் செல்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை,” என, மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.ஆர்.ரமேஷ் குமார் குற்றஞ்சாட்டினார்.

சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரத்தில், காங்கிரஸ் உறுப்பினர் சிவானந்த பாட்டீல் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் ரமேஷ் குமார் கூறியதாவது:

கிராமப்பகுதியில் வசிக்கும் ஏழை நோயாளிகளை பாம்பு, தேள் கடித்தாலும் பரவாயில்லை, அங்குள்ள மருத்துவமனைகளுக்கு செல்லக்கூடாது என்பதில் சிறப்பு டாக்டர்கள் உறுதியாக உள்ளனர்.

சிறப்பு டாக்டர்களுக்கு, மாதம், 1.25 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்க அரசு தயாராக உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் நியமித்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகிறது. ஆனால், டாக்டர்கள், கிராமப்பகுதிகளில் பணியாற்ற முன்வருவதில்லை.

சம்பளம் போதாது என காரணமிருந்தால், சம்பளத்தை மேலும் அதிகரிப்பது பற்றி ஆய்வு செய்யலாம். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக சிறப்பு டாக்டர்கள், கிராமங்களுக்கு செல்ல விரும்புவதில்லை.
ஒப்பந்த அடிப்படையிலாவது ஏழை நோயாளிகளுக்கு சேவை செய்ய வாருங்கள் என்று விண்ணப்பம் கோரியுள்ளோம். கே.பி.எஸ்.சி., மூலமாகவும் விண்ணப்பம் கோரியும், யாரும் முன்வரவில்லை.
ஏறக்குறைய, 900 சிறப்பு டாக்டர்கள் பற்றாக்குறையை நீக்க, விண்ணப்பம் கோரிய போது, 100 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். ஒப்பந்த அடிப்படையில் வரவில்லை என்றாலும், 'கால் பேசிஸ்' ஊதியம் வழங்க தயாராக இருக்கிறோம்.

மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலியாகவுள்ள டாக்டர், நர்ஸ், 'டி குரூப்' ஊழியர் பதவிகள் இன்னும் ஒரு மாதத்தில் நிரப்பப்படும்.

ஏற்கனவே, 80 சதவீதத்துக்கும் அதிகமான டாக்டர் பணியிடங்கள், நிரப்பப்பட்டுள்ளன. மற்ற இடங்களுக்கும் நியமனம் முடிந்துள்ளது. காவல் துறை ஆய்வு நடக்கிறது.

பசவனபாகேவாடி தாலுகா மருத்துவமனைகளில், காலியாகவுள்ள இடங்கள், விரைவில் நிரப்பப்படும். மகளிர் சுகாதார உதவியாளர்கள் பணியிடமும் நிரப்பப்படும். ஆன்லைன் மூலம், விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆன்லைனில் உணவு முன்பதிவு: ரயில்களில் புதிய வசதி

பதிவு செய்த நாள்16ஜூன்2017 06:15



புதுடில்லி: ரயில்களில், தங்கள் விரும்பும் உணவினை, ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளும் புதிய வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

ரயிலில் பீட்சா:

ரயில் பயணிகள் பீட்சா, பர்கர் உள்ளிட்ட தாங்கள் விரும்பும் உணவை ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளும் முறை நேற்று(ஜூன்,15) முதல் அமலுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக ராஜ்தானி, சதாப்தி ஆகிய ரயில்களில் இப்புதிய முறையை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக மெக் டொனால்ட், டோமினோஸ் பீசா, கே.எப்.சி., பீசா ஹட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இந்தியன் ரயில்வே ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆன்லைன்:
www.ecatering.irctc.co.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும், 1323 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் ரயில் பயணிகள் விரும்பும் உணவை முன்பதிவு செய்யலாம். MEAL என டைப் செய்து பின்னர் PNR எண்ணைப் பதிவு செய்து 139 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பியும் உணவை முன்பதிவு செய்யலாம்.
நீட்' தேர்வில் விலக்கு பெறுவதே அரசின் இலக்கு!
சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்


சென்னை: ''நீட் தேர்வில் இருந்து, தமிழகத் திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே, தமிழக அரசின் கொள்கை.அதற்காக, அனைத்து வழிகளிலும் முயற்சித்து வருகிறோம்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.





சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - தங்கம் தென்னரசு: தமிழகம் முழுவதும் 'நீட்' தேர்வு, அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்; மாநில அரசின் உரிமை பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.'நீட்' தேர்வு, சமூக நீதிக்கு எதிரானது.

கிராமப்புற மாணவர்களால், நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட முடியாது. பள்ளிக் கல்வித்துறை, 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, பிளஸ் 2 வரை, மாணவர்களை உருவாக்குகிறது.

அந்த மாணவர்களுக்கு, தகுதி இல்லை எனக் கூறி, மத்திய அரசு தேர்வு நடத்துகிறது. அதே மாணவன், பி.எஸ்சி., வேதியியல் படித்து, பி.எச்டி., முடித்து, மருந்து தொழிற்சாலை ஆரம் பித்தால், அவன் கூறும் மருந்தை, மருத்துவர் கள் எழுதி தருகின்றனர்.

தமிழகத்திற்கு, 'நீட்' தேர்வில் இருந்து, விலக்கு அளிக்க கோரி சட்டம் இயற்றி, ஜனாதிபதி ஒப்பு தலுக்கு அனுப்பினோம்; அதன் நிலை என்ன? 'நீட்' தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறுகிறார். தமிழக அரசின் நிலை என்ன?

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: தமிழகத்திற்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது. அதற்காகவே, குறித்த காலத்தில், இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பினோம்.அது, மத்திய உள்துறை சட்டப் பிரிவில் உள்ளது.

அவர்கள் தான், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். அதற்கு முன், மத்திய சுகாதாரத்துறை மற்றும்மத்திய மனிதவள மேம்பாட்டு துறையிடம், கருத்து கேட்டனர்.

அந்த துறை சார்பில், சாதகமான பதில் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை சந்தித்து பேசினோம். இரண்டு முறை விளக்கம் கேட்டனர்; அவர்கள் கேட்ட விளக்கங்களை, உடனடியாக அனுப்பி வைத்தோம்.பிரதமரை, இரு முறை முதல்வர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.

மத்திய சுகாதாரத்துறையும், மனிதவள மேம்பாட்டு துறையும், சாதகமான பதிலை அளிக்கவில்லை. நீதிமன்றத்தில், தமிழக அரசின் நிலை குறித்து கேட்ட போது, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளதை தெளிவுப்படுத்தி உள்ளோம்.

மத்திய, மாநில அரசுகளின் கல்வித்தரம் சிறப்பாக இருந்தாலும், பாடத்திட்டங்கள், கற்பித்தல் முறை போன்றவற்றில், வேறுபாடு உள்ளது என்பதை தெரிவித்துள்ளோம். மத்திய உள்துறையின் சட்டப் பிரிவு, எந்த பதிலையும் தெரிவிக்காமல் உள்ளது.

அதன் முடிவை பொறுத்தே, நாம் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள இயலும்.உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. அதில், தீர்ப்பு எப்படி வருகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

தீர்ப்புபாதகமாக வந்தால், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், உள் ஒதுக்கீடு பெற இயலுமா என்றும், சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வருகிறோம்.'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு பெற, அனைத்து விதமான முயற்சிகளையும், எடுத்து வருகிறோம்.

தி.மு.க., - துரைமுருகன்: அமைச்சர் மிகப்பெரிய விளக்கத்தை அளித்துள்ளார். சுருக்கமாககூறினால், 'ஆப்பரேஷன் வெற்றி; நோயாளி மரணம்' என்ற கதைதான்.டில்லியில் முகாமிட்டு, சட்டத்திற்கு ஒப்புதல் தருகிறீர்களா; இல்லையா என, கேட்டிருக்க வேண்டாமா?
அமைச்சர் தங்கமணி: மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, இதே வேகத்தில், நீங்கள் காவிரி ஆணையம் அமைக்க செய்திருக்கலாம் இல்லையா?

அமைச்சர் சி.வி.சண்முகம்: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, 'நீட்' தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது, கூட்டணியில் இடம் பெற்றிருந்த, தி.மு.க., அதை தடுத்திருக்க வேண்டாமா?

துரைமுருகன்: நாங்கள் செய்யாததால் தானே, மக்கள் உங்களை கொண்டு வந்தனர். நீங்களும் செய்யாவிட்டால் எப்படி?

தி.மு.க., - பொன்முடி: தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசை வலியுறுத்தி, 'நீட்' தேர்வை நிறுத்தி வைத்தோம்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: நீங்கள் போராடி நிறுத்தவில்லை. உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் நிறுத்தப்பட்டது.

பொன்முடி: தடை விதிக்க காரணமே, தி.மு.க., தான்.

அமைச்சர் விஜயபாஸ்கர்: தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியானபோது, தமிழகத்திற்கு, நீங்கள் விலக்கு பெற்றிருக்கலாம்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Thursday, June 15, 2017

இன்ஜி., படிப்பில் மத்திய அரசு கல்லூரி 'டாப்' தமிழக போக்குவரத்து கல்லூரியும் சாதனை


அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், மத்திய, மாநில அரசின் இன்ஜி., கல்லுாரிகள் அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

Clash over government nominee leaves professors in state of worry

By Ashmita Gupta  |  Express News Service  |   Published: 15th June 2017 01:11 AM  |  

CHENNAI: The wait for appointment of a vice-chancellor for Anna University seems to be never-ending. The new search panel, which was supposed to propose nominees, is yet to be constituted. It’s been 20 days since the higher education minister announced that the university will get VC within three months.
The trouble is that the government’s nominees for the three-member committee is yet to be finalised, and it is reportedly caught-up between caste equation of the chief minister and high education minister.
Faculty members are worried that the delay in selection of search committee will further delay VC selection. While other reputed universities have received VCs, Anna University is yet to get one, as the governor rejected nominees and dismissed the previous VC search committee. A new set of VC faculty members told Express that the governor’s nominee (Justice RM Lodha) and a syndicate nominee (K Ananthapadmanabhan, former director of IIT Kanpur) were selected on June 5, but the government’s nominee is yet to be selected.
“There was a rumour that there’s a dispute between the chief minister and higher education minister over names. CM Edappadi Palanisami wants a person from his community (gounder), while KP Anbalagan, the higher education minister, wants a person from his community (Vanniyar),” said S Chandramohan, secretary of Anna University Teacher’s Association (AUTA).
A professor, requesting anonymity, said the university — which is the syndicate nominee — usually announces first, followed by the government’s nominee and then the governor’s nominee. But this time, the last one has been announced first, followed by the syndicate nominee. “We’re worried but hopeful, as the higher education minister had announced that VC will be appointed within three months.”
Arul Aram, president of AUTA, said the government should not delay this process any further. “The search committee is for selection of VC of an important technical university. If they wish, they can complete selection of government’s nominee within a day,” he said.
Chandramohan pointed out that without re-appointment, the current HoDs are holding on to posts and not giving chance to other professors. The Career Advancement Scheme implementation guidelines were issued a month ago, but so far they have not been implemented.

EXPERT EXPLAINS


தண்டலத்தில் சக்தி வித்யாஸ்ரம் பள்ளி தொடக்கம்

By DIN  |   Published on : 15th June 2017 03:52 AM  |   
sakthividhyasarama
சென்னையை அடுத்த தண்டலத்தில் புதன்கிழமை நடைபெற்ற சக்தி வித்யாஸ்ரம் பள்ளி தொடக்க விழாவில் ஆர்.எம்.கே.பொறியியல் கல்லூரி தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினத்துக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார்
சென்னையை அடுத்த தண்டலத்தில் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சக்தி வித்யாஸ்ரம் பள்ளி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஆர்.எம்.கே.கல்விக் குழுமத்தின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பள்ளியைத் திறந்து வைத்தார். கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.திலகவதி ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றினார். சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் என்.விஜயன், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.திருவளர் செல்வி வாழ்த்துரை வழங்கினர்.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பிச்சாண்டி, டாமின் மனோகரன், சக்தி மாரியம்மன் கல்விக் குழுமத் தலைவர் ஆர்.ராஜசேகரன், துணைத் தலைவர் ஆர்.அருண்குமரன், வழக்குரைஞர் நடராஜன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.


ஒரு நாள் கால்ஷீட்டுக்கு 1 கோடி ரூபாய் பெறும் நகைச்சுவை நடிகர்!

By சரோஜினி  |   Published on : 14th June 2017 10:56 AM  | 
bramma

'மொழி', 'சென்னை 28' உள்ளிட்ட சில திரைப்படங்கள் வாயிலாக நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பிரம்மானந்தம் தெலுங்கில் நம்பர் ஒன் நகைச்சுவை நடிகர். ஆச்சி மனோரமாவைப் போல நகைச்சுவை நடிகராகவே  இதுவரை  சுமார் 1000 படங்களுக்கும் மேலாக நடித்து முடித்து விட்டார். இந்தப் பெருமைக்காக இவரது பெயர் ‘கின்னஸ் சாதனைப் பட்டியலில்’ இடம் பெற்றிருக்கிறது. அது மட்டுமல்ல; இவரது தற்போதைய சொத்து மதிப்பு 320 கோடிகளாம். டோலிவுட்டில் நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் மிகச் சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி பின்னர் உச்சம் தொட்டவர் பிரம்மானந்தம். ஒரு காலகட்டத்தில் தமிழில் கவுண்டமணியைப் போல தெலுங்கில் பிரம்மானந்தம் இல்லாத திரைப்படங்களைக் காண்பதே அரிது எனும் நிலை இருந்தது. இப்போதும் பிரம்மானந்தம் பரபரப்பாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். ஒருநாள் படப்பிடிப்புக்கான கால்ஷீட்டுக்கு அவர் பெறும் சம்பளம் 1 கோடி ரூபாய். இதைத் தவிர கோடிக்கணக்கில் வருமானம் பெற்றுத் தரக்கூடிய வகையிலான விவசாய நிலமும் அவரிடம் உண்டு. அதில் பிரம்மானந்தம் விவசாயமும் செய்து வருகிறார்.
பிரபல தெலுங்கு இயக்குனரான ஜந்தியாலா,  முதல் முறையாக ‘மொத்தப்பாய்’ எனும் மேடை நாடகத்தில் பிரம்மானந்தத்தின் நடிப்பைக் கண்டு வியந்து போனார். உடனே அவரை வரவழைத்துப் பேசிய ஜந்தியாலா, தனது திரைப்படமான ‘சந்தபாபாயில்’ பிரம்மானந்தத்தை நகைச்சுவை வேடத்தில் நடிக்க வைத்தார். அந்தப் படத்தில் பிரம்மானந்தத்தின் நகைச்சுவை நடிப்புக்கு பரவலாகப் பாராட்டு கிடைத்தது. அப்படித்தான் தொடங்கின பிரம்மானந்தத்தின் இன்றைய இலக்குக்காக வெற்றிப் படிகள்.
தற்போது பிரம்மானந்தத்திடம், Audi R8, Audi Q7, and Mercedes-Benz (Black) உள்ளிட்ட கார்கள் உள்ளன. சினிமா, அரசியல், விளையாட்டு எனப் பல்துறை பிரபலங்களின் பங்களாக்கள் அமைந்திருக்கும் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அவருக்குச் சொந்தமாக ஒரு பங்களா இருக்கிறது. தெலுங்குப் படங்கள் மட்டுமல்லாது தமிழிலும் தனக்கு கிடைத்த வரவேற்பைக் கண்ட பிறகே பிரம்மானந்தம் தனது ஒருநாள் கால்ஷீட்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் என நிர்ணயித்தாராம். திறமை இருப்பவர்களை எத்தனை விலை கொடுத்தும் பயன்படுத்திக் கொள்ள திரையுலகம் தயங்காது என்பதற்கு மற்றுமொரு சாட்சி நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம்.

ஐந்து பெரிதா? ஆறு பெரிதா? அவையில் எழுந்த சிரிப்பலை

By DIN  |   Published on : 15th June 2017 01:25 AM  |  
ஐந்து பெரிதா, ஆறு பெரிதா என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அளித்த விளக்கத்துக்குப் பேரவைத் தலைவர் தனபால் அளித்த பதிலால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
வனத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புதன்கிழமை பேசியது:
ஐந்து (விலங்கு) சிறிது, ஆறுதான் (மனிதர்) பெரிது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சுனாமி தாக்குதலின்போது பலியானவர்கள் பெரும்பாலும் ஆறறிவு உள்ள மனிதர்கள்தான். பறவைகள், விலங்குகள் போன்றவை சுனாமி ஆபத்தை முன்பே உணர்ந்து கொண்டு உயரமான இடங்களுக்குச் சென்றுவிட்டன. எனவே அவை தப்பின என்றார்.
இறுதியாக திண்டுக்கல் சீனிவாசன் உரையை முடித்ததும், பேரவைத் தலைவர் தனபால் ஐந்தும் பெரிதுதான் ஆறும் பெரிதும்தான். உங்கள் உரையும் பெரிதுதான் என்றார். அவையில் ஒரே சிரிப்பலை எழுந்தது.

    3 பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை 249 -இல் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் தேர்ச்சி அண்ணா பல்கலை. வெளியிட்டுள்ள பட்டியலில் அம்பலம்

    By DIN  |   Published on : 14th June 2017 03:28 AM  |   
    annauniv1
    அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய 2016 நவம்பர் -டிசம்பர் பருவத் தேர்வுகளில் மூன்று பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.
    மேலும், இரண்டு பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலும், 67 கல்லூரிகளில் இரட்டை இலக்கத்திலும் மாணவர் தேர்ச்சி விகிதம் இருப்பதும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையிலான பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் தெரிய வந்துள்ளது.
    இந்தியாவிலேயே பிற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் அதிக பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு 523 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் சிறந்த கல்லூரிகளைத் தேர்வு செய்வது என்பது மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோருக்கும் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது.
    இதைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகித விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்தப் பட்டியலை வெளியிட உத்தரவிட்டது.
    இதையடுத்து, பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகித விவரம் கடந்த 2014 -15 கல்வியாண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
    தற்போது 2017 -18 கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை வரும் 27 -ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில், 2016 -ஆம் ஆண்டு ஏப்ரல் -மே மற்றும் நவம்பர் -டிசம்பர் பருவத் தேர்வுகளின் மாணவர் தேர்ச்சி விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது.
    இதில், 2016 ஏப்ரல் -மே பருவத் தேர்வுக்கு 516 பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் தேர்ச்சி விகித விவரங்களும், நவம்பர் -டிசம்பர் பருவத் தேர்வுக்கு 506 பொறியியல் கல்லூரிகளுக்கான விவரங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
    பல்கலைக்கழகத்தின் aucoe.annauniv.edu  என்ற இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த விவரங்களை, பொறியியல் படிப்புகளில் சேரவுள்ள மாணவர்களும், அவர்களுடைய பெற்றோரும் பார்த்து எந்தக் கல்லூரியைத் தேர்வு செய்வது என்பதை முடிவு செய்யலாம் என்கின்றனர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.
    இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
    ஒருவர் கூட தேர்ச்சி இல்லை: 2016 நவம்பர்-டிசம்பர் பருவத் தேர்வைப் பொருத்தவரை 3 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அதாவது கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒருவர் மட்டும் பருவத் தேர்வில் பங்கேற்று, தோல்வியடைந்துள்ளார். நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் 25 பேர் தேர்வில் பங்கேற்று, ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு தனியார் கல்லூரியில் 57 பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
    மேலும், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு கல்லூரியில் 255 பேர் தேர்வெழுதி 8 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேனியில் உள்ள ஒரு கல்லூரியில் 67 பேர் பங்கேற்றதில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    இந்தப் பருவத் தேர்வில் 67 பொறியியல் கல்லூரிகளில் இரட்டை இலக்கத்தில் மட்டுமே மாணவர் தேர்ச்சி இடம்பெற்றுள்ளது. மேலும் 249 பொறியியல் கல்லூரிகள் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன.
    2016 ஏப்ரல்-மே பருவத் தேர்வைப் பொருத்தவரை திண்டுக்கல், நெல்லை, தேனி, வேலூர், கோவை ஆகிய பகுதிகளில் உள்ள 5 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் தேர்ச்சி விகிதம் உள்ளது. இதில், தேனி கல்லூரியில் 88 பேர் தேர்வெழுதி 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல் கல்லூரியில் 94 பேர் எழுதி 8 பேரும், கோவை கல்லூரியில் 54 பேர் எழுதி 3 பேரும், நெல்லை கல்லூரியில் 43 பேர் தேர்வெழுதி 9 பேரும், வேலூர் கல்லூரியில் 14 பேர் தேர்வெழுதி 3 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    மேலும், 46 கல்லூரிகளில் இரட்டை இலக்கத்திலும், 184 கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவும்தான் மாணவர் தேர்ச்சி விகிதம் உள்ளது.
    100 சதவீத தேர்ச்சி இல்லை: இந்த இரண்டு பருவத் தேர்வுகளிலும் எந்தவொரு பொறியியல் கல்லூரியும் 100 சதவீத தேர்ச்சி பெறவில்லை.
    நவம்பர் - டிசம்பர் பருவத் தேர்வில் 94.74 சதவீத மாணவர் தேர்ச்சியுடன் சேலம் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் 94.65 சதவீத மாணவர் தேர்ச்சியுடன் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமும், 93.47 சதவீத மாணவர் தேர்ச்சியுடன் கரூர் வி.எஸ்.பி. பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.இவற்றுடன் சேர்த்து மொத்தம் 8 கல்லூரிகள் மட்டுமே 90 சதவீதத்துக்கு மேல் மாணவர் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன.
    இதேபோல், ஏப்ரல்-மே பருவத் தேர்வில் 98.95 சதவீத மாணவர் தேர்ச்சி விகிதத்துடன் நாமக்கல் விவேகானந்தா பெண்கள் பொறியியல் கல்லூரி முதலிடத்தில் உள்ளது.
    இதற்கு அடுத்த இடங்களில் 98.02 சதவீத மாணவர் தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மெப்கோ ஸ்கெலங்க் பொறியியல் கல்லூரியும், 97 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமும் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் சேர்த்து இந்தப் பருவத் தேர்விலும் மொத்தம் 8 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே 90 சதவீதத்துக்கு மேல் மாணவர் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன.

    NEWS TODAY 23.12.2025