Wednesday, August 23, 2017

 பழனிசாமி தினகரன் 19 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு... வாபஸ்!

சென்னை, :'முதல்வர் பழனிசாமி மீது, அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், அவருக்கு அளித்து வந்த ஆதரவை, வாபஸ் பெறுகிறோம்' என, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், கவர்னர் வித்யாசாகர் ராவிடம், நேற்று கடிதம் அளித்தனர். அதன்பின், சென்னையில், தினகரன் வீட்டில் கூடி, பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்வராக்குவது குறித்து ஆலோசித்தனர். இந்த தகவல் தெரிந்ததும், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை, கோடிகளை கொடுத்து வளைக்க, ஆளும் தரப்பு தீவிரமாகி உள்ளது.

பலத்தை நிரூபிக்க, இரு தரப்பினரும், தில்லாலங்கடி வேலைகளில் இறங்கியுள்ளதால், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேரும், சகல கவனிப்புகளுடன், புதுச்சேரி கடற்கரை சொகுசு விடுதியில், தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.சென்னையில், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், நேற்று காலை, 10:00 மணிக்கு, கவர்னர் மாளிகைக்கு சென்றனர்.
அங்கு கவர்னர், வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தனித்தனியே கடிதம் அளித்தனர்.

அதிருப்தி

கடிதத்தில், அவர்கள் கூறியுள்ளதாவது:பிப்ரவரியில், முதல்வர் பழனிசாமி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து, நாங்கள் கையெழுத்திட்டு, தங்களிடம் கடிதம் வழங்கினோம். பின், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தபோது, முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக ஓட்டளித்தோம்.தற்போது, முதல்வர் பழனிசாமி மீது, அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அவர், தன் அதிகாரத்தை, முறைகேடாக பயன்படுத்துகிறார்; பாரபட்சமாக நடந்து கொள்கிறார்; அரசு இயந்திரத்தை,

தவறாக பயன்படுத்துகிறார். அதனால், ஊழல் அதிகரித்துள்ளது. அவர் ஊழல் செய்வதாகவும், ஊழலுக்கு துணை போவதாகவும், பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுவது, எங்கள் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது.ஆகஸ்ட் முதல் வாரத்தில், ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், 'தற்போதைய ஆட்சியில் ஊழல் நிறைந்துள்ளது' என, குற்றம் சாட்டினார். இது, முதல்வர் பழனிசாமி அரசு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. தற்போது, அவரை தன் அமைச்சரவையில் சேர்த்து, துணை முதல்வர் பதவியை, பழனிசாமி வழங்கி உள்ளார். இது, முதல்வர் பாரபட்சமாக செயல்படுவதையும், அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதையும்,
ஊழலுக்கு துணை போவதையும் காட்டுகிறது.அதனால், முதல்வர்பழனிசாமி, தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார். எங்களுக்கும், அவர் மீது நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது. எனவே, அவருக்கு அளித்த ஆதரவை, திரும்ப பெறுகிறோம்.அதேநேரத்தில், நாங்கள், அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராகவும், அக்கட்சி, எம்.எல்.ஏ.,வாகவும் தொடர்கிறோம். இந்த விஷயத்தில் தலையிட்டு, சட்டப்படியான நடவடிக்கைகளை, நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பெரும்பான்மை

சட்டசபையில், அ.தி.மு.க.,விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில், 19 பேர், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவதாக, கவர்னரிடம் கடிதம் கொடுத்து உள்ளதால், அரசுக்கு பெரும்பான்மை வாபஸ்இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும் நிலை ஏற்படுமானால், பழனிசாமி அரசுக்கு சிக்கல் ஏற்படும்.எனவே, தினகரன் பக்கம் நிற்கும் எம்.எல்.ஏ.,க்களை, கோடிகளில்

விலை பேச, ஆளும் தரப்பு வலை விரித்துள்ளது. அது தொடர்பாக, ரகசிய பேரம் நடப்பதை அறிந்த தினகரன், தன் ஆதரவாளர்களை, புதுச்சேரிக்கு கடத்தி விட்டார். அங்குள்ள, 'விண்ட் ப்ளவர்' சொகுசு விடுதியில், 19 பேரும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்காக, அங்கு, 30 அறைகள், 'புக்' செய்யப்பட்டு உள்ளன.இதற்கிடையில், பழனிசாமி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, தலித் சமூகத்தை சேர்ந்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவரை முதல்வராக்க, தினகரன் தரப்பு திட்டம்தீட்டியுள்ளது. அதன் வாயிலாக, கட்சியில் கணிசமாக உள்ள, தலித் சமூக எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பக்கம் வந்து விடுவர் என, தினகரன் தரப்பினர் கருதுகின்றனர்.இது குறித்து, சென்னையில், நேற்று ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தி உள்ளார். அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, சசிகலா தம்பி திவாகரன் கூறுகையில், ''தற்போது சபாநாயகராக உள்ள, தலித் சமூகத்தை சேர்ந்த தனபாலை, முதல்வர் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும்,'' என, கூறியுள்ளார்.

ஆட்சி கவிழ வாய்ப்பு குறைவு!

தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை, திரும்பப் பெறுவதாக, கவர்னரிடம் கடிதம் கொடுத்திருந்தாலும், ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாக, சட்டசபை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:எம்.எல்.ஏ.,க்கள் அளித்த கடிதம் அடிப்படையில், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு கவர்னர் உத்தரவிடலாம்.அவ்வாறு உத்தரவிட்டால், சட்டசபை கூட்டப்படும். கூட்டத்தில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமானால், குறைந்தபட்சம், 24 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரித்து கையெழுத்திட வேண்டும்.
தற்போது, தினகரனிடம், 19 எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் உள்ளனர். 24 பேர் முன்மொழியாவிட்டால், தீர்மானம் தள்ளுபடி செய்யப்படுவதாக, சபாநாயகர் அறிவித்து விடுவார். எனவே, தி.மு.க.,வினர் ஆதரித்தால் மட்டுமே, முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும்.மேலும், எம்.எல்.ஏ.,க்கள் அளித்துள்ளகடிதத்தில், முதல்வர் பழனிசாமி மீது, நம்பிக்கை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர். இது, முரண்பாடாக உள்ளது. எனவே, அந்த கடிதத்தை, கவர்னர் ஏற்க மறுக்கவும் வாய்ப்புள்ளது.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர விரும்பினால், சபாநாயகரிடம் கடிதம் அளிக்க வேண்டும். சட்டசபை நடைபெறும் போது தான், அதை சபாநாயகர்
எடுத்துக் கொள்வார். இப்போதைக்கு, சட்டசபை கூட வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கவர்னருடன் மைத்ரேயன் சந்திப்பு

பதிவு செய்த நாள்22ஆக
2017
21:55

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன், நேற்று, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், சசிகலா குடும்பத்தினர் நெருக்கடியால், எப்போது வேண்டுமானாலும், ஆட்சி கவிழும் நிலை உள்ளது.
நேற்று காலை, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர், கவர்னர் மாளிகையில், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, கடிதம் அளித்தனர். அவர்கள் சென்ற பின், அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன், கவர்னரை சந்தித்து பேசினார்.

இது குறித்து, மைத்ரேயன் கூறுகையில், ''கவர்னர் என் நீண்ட நாள் நண்பர். மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அப்போது, இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதித்தேன்,'' என்றார்.
இதே நாளில் அன்று

பதிவு செய்த நாள்22ஆக
2017
18:54




1914 ஆகஸ்ட் 23

டி.எஸ்.பாலையா, துாத்துக்குடி மாவட்டம், சுண்டங்கோட்டையில், 1914 ஆக., 23ல் பிறந்தார். சிறு வயது முதல், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். நாடகங்களில் நடிக்க துவங்கிய இவர், 1936ல், சதி லீலாவதி என்ற படம் மூலம் அறிமுகமானார். 1937ல், தியாகராஜ பாகவதர் நடித்த, அம்பிகாபதி என்ற படத்தில் வில்லனாக தோன்றினார்.தில்லானா மோகனாம்மாள், காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு உள்ளிட்ட, சில நகைச்சுவை படங்களிலும் நடித்தார். சிவாஜியுடன், திருவிளையாடல் என்ற படத்தில், சோமயானந்தா பாகவதராக அவர் நடித்த நடிப்பு, காலத்தில் அழியாதது. ௬௦ ஆண்டுகளுக்கும் மேலாக, கதாநாயகன், வில்லன், நகைச்சுவை நடிகர் என பல்வேறு, 'கெட்டப்பில்' நடித்தவர். 1972 ஜூலை 22ல் காலமானார். அவர் பிறந்த தினம், இன்று.
கிராம மாணவர்களின் படிக்கட்டு பயணம்
பதிவு செய்த நாள்23ஆக
2017
00:42




நரிக்குடி: விருதுநகர் மாவட்டம், நரிக்குடி பகுதி கிராம மாணவர்கள் போதிய அரசு பஸ் வசதியில்லாமல், படிக்கட்டில் தொங்கியபடி பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர்.

நரிக்குடி, மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேளி, கணையமறித்தான், கொட்டக்காச்சியேந்தல், எஸ்.வல்லக்குளம், டி.வேலாங்குடி, மறையூர், மாயலேரி, நல்லதரை, விடத்தகுளம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 900 மாணவர்கள் படிக்கின்றனர்.

இவர்கள் பள்ளிக்குச் சென்று வர, போதிய அரசு பஸ்கள் இல்லாததால், எப்போதாவது வரும் அரசு பஸ்சில், ஒரே நேரத்தில் 100 மாணவர்கள் ஏற வேண்டியுள்ளது. குறைந்த துாரம் என்றால், நடந்தாவது பள்ளிக்கு மாணவர்கள் வந்து விடுவர். இப்பகுதி கிராமங்கள் பள்ளியிலிருந்து பல கி.மீ., துாரத்தில் உள்ளன.எனவே பள்ளி ஆரம்பிக்கும் நேரம் மற்றும் முடியும் நேரத்திற்கு கூடுதல் அரசு பஸ்களை இயக்க, போக்குவரத்து துறையினர் முன்வர வேண்டும்.
ராகிங் செய்த மாணவர்கள் கைது

பதிவு செய்த நாள்23ஆக
2017
00:31

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு பி.காம்., பிரிவு மாணவர்களான சூரங்கோட்டையை சேர்ந்த தினேஷ்குமார், 20, ராமநாதன், 23, ஆகியோர், நேற்று முன் தினம் மதியம் 2:55 மணிக்கு ஆங்கில பிரிவில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி களை ராகிங் செய்தனர். கல்லுாரி முதல்வர் குருசாமி புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீஸ் எஸ்.ஐ., குருசாமி, மாணவர்கள் தினேஷ்குமார், ராமநாதனை கைது செய்தனர்.
சசிகலாவுக்கு வசதி கிடைத்தது எப்படி? : உதவியவர் பெயரை வெளியிட்டார் ரூபா

பதிவு செய்த நாள்22ஆக
2017
21:57


புதுடில்லி: சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் கிடைப்பதற்கு உதவியவரின் பெயரை, கர்நாடகாவின் முன்னாள் சிறைத் துறை, டி.ஐ.ஜி., ரூபா வெளியிட்டார்.

தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனைபெற்று, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார். 'சிறைத் துறை அதிகாரிகளுக்கு, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து, சிறையில் சசிகலா,சொகுசு வசதிகளை பெற்றுள்ளார்' என, கர்நாடக சிறைத் துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த, ரூபா புகார் கூறியிருந்தார்.

அறிக்கை : இது தொடர்பாக, சிறைத் துறை உயரதிகாரிகளுக்கு, ஆதாரங்களுடன் அவர் அறிக்கை அனுப்பியிருந்தார். இதற்கிடையே, அவர் வேறு பணிக்கு மாற்றப்பட்டார். சிறையில் நடந்துள்ள முறைகேடு குறித்து, கர்நாடக ஊழல் தடுப்பு அமைப்பு விசாரிக்கிறது. இந்த அமைப்பின் விசாரணையின் போது, பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களுடன், தன் அறிக்கையை, ரூபா அளித்துள்ளார்.அந்த அறிக்கையில், புதிய தகவல்களை அவர் வெளியிட்டு உள்ளார்.

அதன் விபரம்: வி.எஸ்.பிரகாஷ் எனப்படும், ஆஸ்திரேலியா பிரகாஷ் என்பவரை, சிறையில் இருந்த போது, சசிகலா சந்தித்துள்ளார். பிரகாஷ் மூலம், மல்லிகார்ஜுனா என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.இவர்கள் இணைந்து தான், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதி களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

தீவிர விசாரணை : இது தொடர்பான ஆதாரங்களை அளித்துள்ளேன். தீவிர விசாரணை நடத்தினால், மேலும்பல உண்மைகள் தெரிய வரும்.சசிகலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறைக்கு அருகிலுள்ள, அறைகளையும் சேர்த்து, நீண்ட வராண்டாவில் தடுப்பு போடப்பட்டிருந்தது; இந்த ஐந்து அறைகளையும், சசிகலா பயன்படுத்தி உள்ளார்.

சிறை விதிகளை மீறி, பல பார்வையாளர்களை அவர் சந்தித்துள்ளார். நீண்ட நேரம் இந்த சந்திப்புகள் நடந்துள்ளன. லஞ்சம் கொடுத்து, பல சலுகைகளை சசிகலா அனுபவித்து உள்ளார்.

இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, சிறையில், பையுடன் சசிகலாவும், இளவரசியும் உலா வரும், 'வீடியோ' காட்சி கள் நேற்று முன்தினம் வெளியாகின.

இதையடுத்து, அன்று இரவே, சிறையின் தலைமை கண்காணிப்பாளர், நிக்காம் பிரகாஷ்அம்ரித், அதிரடியாக,கர்நாடக ரிசர்வ் போலீஸ் பட்டாலியனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இவர், சசிகலாவுக்கு உதவியதால், மாற்றப் பட்டாரா, என, எதிர்க் கட்சிகள் சந்தேகம் தெரிவித்துள்ளன.ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபாவின் சிறை முறைகேடு குற்றச்சாட்டுக்கு பின், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் தலைமை கண்காணிப்பாளரை, 40 நாட்களில், ஆறு முறை மாற்றியுள்ளது, பெரும் சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக,கர்நாடக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.

சிறப்பு அறுவை சிகிச்சை பட்ட மேற்படிப்பில் சேரலாம்
பதிவு செய்த நாள்23ஆக
2017
00:39

சென்னை: 'சென்னை மருத்துவ கல்லுாரியில், நுண்துளை அறுவை சிகிச்சை, சிறப்பு பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து, மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை மருத்துவ கல்லுாரியில், நுண்துளை அறுவை சிகிச்சை துறையில், 'போஸ்ட் டாக்டோரல் பெல்லோஷிப்' எனப்படும், இரண்டு ஆண்டு கால சிறப்பு பட்ட மேற்படிப்புக்கு, நான்கு இடங்கள் உள்ளன.
இதற்கான விண்ணப்பங்களை, www.tnhealth.org / www.tnmedicalselection.org என்ற, இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கு, வரும், 25ம் தேதி கடைசி நாள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 26க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்போரின் தகுதிப்பட்டியல் அடிப்படையில், இடங்கள் நிரப்பப்படும். எழுத்து தேர்வு கிடையாது; இந்த இடங்களுக்கான மாணவர் தேர்வு நடைபெறும் தேதி, விரைவில் அறி
விக்கப்படும். .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...