Thursday, August 24, 2017

தினகரனால் நெருக்கடி: முதல்வர் ஆலோசனை

தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டலை சமாளிப் பது குறித்தும்,அவரது அணியில் உள்ள, எம்.எல். ஏ.,க்களை இழுப்பது குறித்தும், முதல் வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.



அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், சசிகலா குடும்பத்தினர், ஆட்சியையும், கட்சியையும், தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க, பகீரத பிரயத் தனத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர் உதவியுடன், ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளனர். கவர்னரை சந்தித்து, 19 பேரும், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, கடிதம் கொடுத்துள்ளனர்.

இதனால், அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ற்பட்டுள்ளது.சட்டசபையில், அ.தி. மு.க.,விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள்; தி.மு.க., விற்கு, 89; காங்கிரசுக்கு எட்டு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு, ஒரு எம்.எல்.ஏ.,வும் உள்ளனர். ஒரு தொகுதி காலியாக உள்ளது.

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், தி.மு.க., தலைவர் கருணா நிதி, உடல் நலக்குறைவால், சட்டசபைக்கு வருவது சிரமம்.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களில், சபாநாயகர் தனபால், ஓட்டளிக்க இயலாது. சம நிலை ஏற்படும் போது மட்டுமே, அவர் ஓட்டளிக்க முடியும். மீத முள்ள, 134அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களில், 19 பேர் தினகரன் அணியில் உள்ளனர்.

அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, கூட்டணி கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர், இன்னமும் முடி வெடுக்கவில்லை என, தெரிவித்துள்ளனர்.

எனவே, தற்போதைய நிலையில், முதல்வர் பழனி சாமிக்கு ஆதரவாக, 112 எம்.எல்.ஏ.,க் கள் மட்டுமே உள்ளனர். மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்க, இன்னும், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் தேவை.

எனவே, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தினகரன் அணி எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் பக்கம் இழுக்க, முதல்வர் தரப்பினர் முயற்சித்து வருகின்ற னர்.ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை குறித்து, நேற்று முன்தினம் தலைமை செயலகத் தில், முதல்வர்பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

நேற்று காலை, 10:00 மணிக்கு, முதல்வர் பழனி சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர், அரிய லுார் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்ப தற்காக, ஒரே விமானத்தில் சென்றனர். அப்போதும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து உள்ளனர்.திருச்சியில் இருந்து காரில், பெரம்ப லுார் சென்றனர். அங்கு, மதிய உணவு முடித்த தும், அமைச்சர்களுடன் ஆலோசித்தனர். அப்போது, தினகரன், துணைப் பொதுச்செயலர் எனக்கூறி, அமைச்சர்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தினகரன் வசமுள்ள, எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்தினரிடம் பேசி, அவர்களை தங்கள் பக்கம் இழுப்பது குறித்தும், ஆலோசிக்கப்பட் டதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த கட்டமாக பொதுக் குழுவை கூட்டுவது குறித்து முடிவு செய்ய அமைச்சர்கள் அனைவரையும் சென்னை வர முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

- நமது நிருபர் -
பழைய கட்டணத்தில் சேர்க்க நடத்த உத்தரவு

பதிவு செய்த நாள்24ஆக
2017
00:49

சென்னை: பழைய கட்டணம் பெற்று, மூன்று மாணவர்களை சேர்க்கும்படி, புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவக் கல்லுாரிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த, லட்சணா ஸ்ரீ உட்பட மூவருக்கு, வெங்கேடஸ்வரா, மணக்குள விநாயகர், புதுச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ஆகிய கல்லுாரிகளில், 2016 - 17க்கு, இடம் கிடைத்தது. கல்லுாரிகளில் சேர முடியவில்லை.

கட்டண நிர்ணய குழு குறிப்பிட்ட, 3.50 லட்சம் ரூபாயை செலுத்த அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மூவரும் மேல்முறையீடு செய்தனர். மனுக்களை, நீதிபதிகள் ராஜிவ் ஷக்தர், அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.

மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர், எம்.ரவி, ''கல்லுாரிகள் கோரிய அதிக கட்டணத்தை, மனுதாரர்களால் செலுத்த முடியவில்லை. அதனால், மாணவர்களுக்கு அந்த கல்லுாரிகளில் இடம் கிடைக்கவில்லை. தற்போது, 12 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தும்படி கூறுகின்றனர். இந்த மாணவர்களுக்கு, 2016 - 17ல் அனுமதி கிடைத்தது. அதிகாரிகளின் தவறால், சேர முடியவில்லை. அவர்கள், 3.50 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து, பழைய கட்டணமான, 3.50 லட்சம் ரூபாய் பெற்று கொண்டு, மூன்று மாணவர்களையும், புதுச்சேரியைச் சேர்ந்த, மூன்று தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர்க்கும்படி, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.
'ஸ்டிரைக்' நடத்திய ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்'

பதிவு செய்த நாள்24ஆக
2017
05:11

'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்தில் பங்கேற்று, பணிக்கு வராதவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கைக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவேண்டும்; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கமான, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு, போராட்டங்களை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தின. இதில், ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. தொடக்க பள்ளிகளில், 90 சதவீத பள்ளிகளில் வகுப்புகள் நடக்கவில்லை; மாணவர்களுக்கு, சத்துணவு வழங்க கூட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று மீண்டும் ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர். தொடர்ந்து, பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு, தனித்தனியே, 'நோட்டீஸ்' அனுப்ப, முதன்மை கல்வி அதிகாரிகள் முடிவு செ ய்துள்ளனர். இதற்கென பட்டியல் தயாரிக்க, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.முதற்கட்டமாக விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பவும், பின், ஒழுங்கு நடவடிக்கை உத்தரவை வழங்கவும், அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

இந்த ஒழுங்கு நடவடிக்கையால், பதவி உயர்வு, அகவிலைப்படி உள்ளிட்ட சலுகைகளில் சறுக்கல் ஏற்படும் என, ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
'நீட்' கவுன்சிலிங்: யாருக்கு 'சீட்?' : கல்வியாளர்கள் கருத்து
பதிவு செய்த நாள்24ஆக
2017
00:00

கோவை: 'நீட்' அடிப்படையில் நடக்கும் கவுன்சிலிங் நடைமுறை குறித்து, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தேர்வின் அடிப்படையில், மருத்துவப் படிப்புக்கான, மாநில அளவிலான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

கவுன்சிலிங் : தனியார் கல்லுாரிகளில் உள்ள நிர்வாக இடங்களுக்கும் சேர்த்து, முதன்முறையாக, பொது கவுன்சிலிங், இன்று துவங்கி, செப்., 4ம் தேதி வரை நடக்கிறது.

இதுகுறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது: நீட் தேர்வுக்கான மாநில தர வரிசை பட்டியலை ஆய்வு செய்ததில், பி.சி., - பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள், 350 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஓ.சி., - மற்ற வகுப்பு பிரிவு, 415; ஓ.பி.சி., - மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு, 285 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றிருந்தால் மட்டுமே, அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாக இட ஒதுக்கீட்டுக்கும், கவுன்சிலிங் நடப்பதால், பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இம்முறையால், பொதுத்தேர்வுக்கான முக்கியத்துவம் குறையும் அபாயமுள்ளது. எனவே, ஐ.ஐ.டி., உட்பட கல்வி நிறுவனங்களில், பொதுத்தேர்வு, 'கட்-ஆப்' நிர்ணயித்து, கவுன்சிலிங் நடத்துவது போல, மருத்துவப் படிப்புக்கும், பொதுத்தேர்வு, 'கட்-ஆப்' மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தவறினால், பள்ளிக்கூடங்கள், 'நீட்' பயிற்சி என்ற பெயரில், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் அபாயம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

கல்வியாளர் 'பாடம்' நாராயணன் கூறியதாவது: தமிழகத்தில், கடந்த 10 ஆண்டுகளாக, தமிழ் வழியில் அரசுப்பள்ளியில் படித்து, 250 மாணவர்களே, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

பொதுத்தேர்வு மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாக வைத்து, கவுன்சிலிங் நடத்தியதால் தான், பிளஸ் 1 பாடத்திட்டம் கற்பிக்காமல், நேரடியாக, பிளஸ் 2 வகுப்பு கையாளப்பட்டது. 

இவர்கள், மருத்துவப் படிப்பில், முதல் பருவத்திலேயே, 'அரியர்' வைக்கின்றனர்.

வாய்ப்பு அதிகம் : நீட் தேர்வு வரவேற்கத்தக்கது; சமீபத்தில் நடந்த நீட் தேர்விலும், 50 சதவீத கேள்விகள், பிளஸ் 1 பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டன. மாநில பாடத்திட்டத்தை முழுமையாக படித்தவர்கள், இத்தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.

அடுத்த ஆண்டு முதல், இத்தேர்வு நடத்தும் அதிகாரத்தை, சி.பி.எஸ்.இ., அல்லாமல், தனி அமைப்பிடம் ஒப்படைக்க பரிந்துரைத்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
நீதிபதி கர்ணன் மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி
பதிவு செய்த நாள்23ஆக
2017
23:03



புதுடில்லி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய, தமிழகத்தைச் சேர்ந்த, சி.எஸ்.கர்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை கைது செய்ய உத்தரவிட்டார். இதனால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, கர்ணனுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

அவர் நேரில் ஆஜராகாததால், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதையடுத்து, கர்ணனை கைது செய்து, ஆறு மாதங்கள் சிறையில் அடைக்க, உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது.

தலைமறைவாக இருந்த கர்ணனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கர்ணனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

நீதிபதிகள், கீதா மிட்டல் மற்றும் ஹரி சங்கர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, கர்ணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மருத்துவ மருத்துவ கல்லூரி தலைவரின் ரூ.48 கோடி சொத்து முடக்கம்கல்லூரி தலைவரின் ரூ.48 கோடி சொத்து முடக்கம்

பதிவு செய்த நாள்23ஆக
2017
23:59

சென்னை: மருத்துவ கல்லுாரி தலைவர், டி.டி.நாயுடுவின், 48 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. சென்னை அருகே, திருவள்ளூரில், தீனதயாள் மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர், டி.டி.நாயுடு. அதே பகுதியில் மருத்துவ கல்லுாரி நடத்தி வந்தார். அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி செயல்பட்ட இக்கல்லுாரியில், அவர், மாணவர் சேர்க்கை நடத்தி, பெற்றோர் மற்றும் மாணவ மாணவியரிடம், 16 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளார். மேலும், போலி ஆவணங்கள் வாயிலாக, ஆந்திரா மற்றும் யூனியன் வங்கிகளில், 136 கோடி ரூபாய் கடன் வாங்கியது உட்பட, மொத்தம், 152 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து, 2015ல், டி.டி.நாயுடுவை கைது செய்தனர்; கல்லுாரி யும் மூடப்பட்டது. அவர், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு உள்ளதால், அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்து, டி.டி.நாயுடுவின், 104 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது. இந்நிலையில், நேற்று, அவருக்கு சொந்தமான, திருத்தணி அருகே, மாமண்டூரில் உள்ள, 17.33 ஏக்கர்; பெரிய கடம்பூரில் உள்ள, 2.46 ஏக்கர் விவசாய நிலங்கள் முடக்கப்பட்டன.

ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வஞ்சுவாஞ்சேரியில் உள்ள, 48 ஆயிரம் சதுரடி நிலம், கூடுவாஞ்சேரி அருகே, வெள்ளரித்தாங்கலில் உள்ள, 35.17 ஏக்கர் நிலம் என, 48 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.
மொத்தம், 152 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
பி.எஸ்சி., நர்சிங்: விண்ணப்பிக்க இன்றே கடைசி

பதிவு செய்த நாள்23ஆக
2017
23:59


சென்னை: அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, துணை நிலை மருத்துவ படிப்புகளுக்கு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அளிக்க, இன்றே கடைசி நாள். தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட, ஒன்பது மருத்துவம் சார் படிப்புகள் உள்ளன. இவற்றுக்கு, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 538 இடங்களும், தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 7,458 இடங்களும் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்தாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை, 7ல் துவங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை, 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் பெற்று உள்ளனர். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், இன்று மாலை, 5:00 மணிக்குள், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு, வந்து சேர வேண்டும். கவுன்சிலிங் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

NEWS TODAY 10.07.2026