Thursday, August 24, 2017

'ஸ்டிரைக்' நடத்திய ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்'

பதிவு செய்த நாள்24ஆக
2017
05:11

'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்தில் பங்கேற்று, பணிக்கு வராதவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கைக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவேண்டும்; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கமான, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு, போராட்டங்களை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தின. இதில், ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. தொடக்க பள்ளிகளில், 90 சதவீத பள்ளிகளில் வகுப்புகள் நடக்கவில்லை; மாணவர்களுக்கு, சத்துணவு வழங்க கூட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று மீண்டும் ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர். தொடர்ந்து, பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு, தனித்தனியே, 'நோட்டீஸ்' அனுப்ப, முதன்மை கல்வி அதிகாரிகள் முடிவு செ ய்துள்ளனர். இதற்கென பட்டியல் தயாரிக்க, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.முதற்கட்டமாக விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பவும், பின், ஒழுங்கு நடவடிக்கை உத்தரவை வழங்கவும், அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

இந்த ஒழுங்கு நடவடிக்கையால், பதவி உயர்வு, அகவிலைப்படி உள்ளிட்ட சலுகைகளில் சறுக்கல் ஏற்படும் என, ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...