Friday, December 1, 2017

வெளிச்சம் போதவில்லை!

By ஆசிரியர் | Published on : 01st December 2017 01:34 AM |

 'வியாபம்' முறைகேடு வழக்கில் மத்தியப் புலனாய்வு அமைப்பு 592 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. இவ்வளவு பெரிய ஊழல், அரசு மற்றும் நிர்வாகத் தலைமைகளின் ஆசியுடனோ, தொடர்புடனோ அல்லாமல் நடந்திருக்கவே முடியாது என்பது அனைவருக்குமே தெரியும். ஐந்தாண்டுகளாக நடத்தப்படும் விசாரணையின் முடிவில், மத்தியப் புலனாய்வு அமைப்பினரால் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் யாரென்று பார்த்தால், இந்த ஊழலில் வெளிப்படையாகக் கையும் களவுமாகப் பிடிபட்ட சாதாரணமானவர்களே தவிர, பின்னணியில் இருந்தவர்கள் ஒருவர்கூடக் கிடையாது.

மத்தியப் பிரதேசத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையிலும், அரசுப் பணியிடங்களை நிரப்புவதிலும் நடந்த முறைகேடுதான் 'வியாபம்' முறைகேடு என்று பரவலாக அறியப்படுகிறது. 'வ்யவசாயிக் பரிக்ஷô மண்டல்' என்கிற ஹிந்தி வார்த்தையின் சுருக்கம்தான் 'வியாபம்'. தமிழகத்தில் பணியாளர் தேர்வு ஆணையம் இருப்பதுபோல, மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்த அமைப்பு இது. இப்போது இதற்குத் 'தொழில்முறைத் தேர்வு ஆணையம்' என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்.


ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், 'வியாபம்' ஆணையம் நடத்திய போட்டித் தேர்வுகளில், முறைகேடான வழியில் தகுதியற்றவர்கள் பணம் கொடுத்து, குறுக்கு வழியில் அரசுப் பணி, பொறியாளர் பணி, மருத்துவப் பணிகளில் சேர்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மருத்துவக் கல்லூரிச் சேர்க்கையிலும் இதுபோல முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மத்தியப் பிரதேச நீதிமன்றம், சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரிக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டது.


2007 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் நடந்திருக்கும் இந்த முறைகேடு குறித்த விசாரணை தொடங்கியது முதல், இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் மரணமடைவது ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. பெரும்பாலானவர்கள் வாகன விபத்திலும், ஏனையோர் சிலர் தற்கொலை செய்து கொண்டும் இறந்திருக்கிறார்கள். மரணமடைந்தவர்களில் 32 பேர், 25-க்கும் 30-க்கும் இடையிலான வயதுடையவர்கள் என்று சிறப்பு விசாரணைக் குழு தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது.
தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நுழைவுத் தேர்வு எழுதாமலேயே, எழுதியதாகப் பதிவு செய்யப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 

மத்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணை, மாநில அரசின் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையைவிட விரிவாகவும், முறையாகவும் நடந்திருக்கிறது என்றாலும்கூட, இந்த விசாரணை முடிவுகள் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமையவில்லை என்பதுதான் உண்மை.

மத்தியப் புலனாய்வு அமைப்பின் வளையத்துக்குள் 'வியாபம்' ஆணையத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த மூத்த இந்திய அரசுப்பணி அதிகாரிகளோ, அவர்களை வழிநடத்தும் துறைசார்ந்த அமைச்சர்களோ ஏன் வரவில்லை என்று புரியவில்லை. இது குறித்துத் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று அரசியல் தலைமை பதில் சொல்லித் தப்பிக்க முடியாது, கூடாது.
'வியாபம்' முறைகேட்டில் மாநில ஆளுநர் ராம் நரேஷ் யாதவ், மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், அவரது மனைவி சாதனா, மத்திய அமைச்சர் உமாபாரதி உள்ளிட்டோர் தொடர்புடையவர்கள் என்று இடித்துரைப்பாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இவர்களது மனுவை ஏற்றுத்தான், 'வியாபம்' தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்தியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கும்படியும், தனது நேரடி மேற்பார்வையில் விசாரணை தொடரும் என்பதால் போபால் உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் உச்சநீதிமன்றம் இரண்டாண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது.


பதவியின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதால், மாநில ஆளுநர் விசாரணை வளையத்திலிருந்து அகற்றி நிறுத்தப்பட்டார். மற்றவர்கள், மத்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணையில் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அகற்றி நிறுத்தப்பட்டனரா, இல்லை அவர்கள் வசதியாக விசாரணையிலிருந்து தவிர்க்கப்பட்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.


ஏறத்தாழ ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படும் 'வியாபம்' முறைகேடு குறித்த விசாரணையிலும்கூட முறைகேடு நடக்கிறதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, மத்தியப் புலனாய்வு அமைப்பின் செயல்பாடு.
'வியாபம்' முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சுமார் 2,000 பேரில் முன்னாள் மாநிலக் கல்வி அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மா, இந்தியக் காவல் பணி அதிகாரி ஆர்.கே. ஷிவாரே, மருத்துவர் வினோத் பண்டாரி, சுரங்க அதிபர் சுதீர் சர்மா என்று பல பெருந்தலைகள் இருந்தனர். அவர்கள் குறித்து மத்தியப் புலனாய்வு அமைப்பின் இப்போதைய குற்றப்பத்திரிகையில் எதுவும் கூறப்படவில்லையே ஏன்?


1,087 மாணவர்கள் முறைகேடாக மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களது சேர்க்கை ரத்து செய்யப்பட்டு, கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள், சரி. அத்துடன் முடிந்துவிட்டதா? 'வியாபம்' முறைகேட்டில் தொடர்புடைய பலர் வாகன விபத்துகளில் மர்மமான முறையில் இறந்திருக்கிறார்களே, அது குறித்து ஏன் விசாரணை இல்லை, குற்றவாளிகள் ஏன் அடையாளம் காணப்படவில்லை?
இப்படி இன்னும் பல அவிழ்க்காத, அவிழ்க்க முடியாத முடிச்சுகள் இந்த முறைகேட்டில் தொடர்கின்றன. நிஜம்தான் என்ன? 


மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானுக்குத்தான் வெளிச்சம்!

டிசம்பர் 2 மின் தடை

By DIN | Published on : 01st December 2017 04:47 AM

| பராமரிப்புப் பணிகளையொட்டி, சென்னை உயர் நீதிமன்ற வளாகப் பகுதிகளில் சனிக்கிழமை (டிச.2) காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: அங்கப்பன் தெரு, மூர் தெரு, 2 -ஆவது கடற்கரை சாலை, லிங்கி செட்டி தெரு, எர்ரபாலு தெரு, மூக்கர் நல்லமுத்து தெரு, தம்பு செட்டி தெரு, ஆர்மேனியன் தெரு ஒரு பகுதி, எஸ்பிளனேடு சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை (பகுதி), பத்ரியன் தெரு, பந்தர் தெரு, மலையப்பெருமாள் சாலை, ஆண்டர்சன் சாலை, ஸ்டிரிங்கர் சாலை, அம்பர்சன் சாலை, குறளகம், சட்டக் கல்லூரி நீரேற்று நிலையம், ராஜா அண்ணாமலை மன்றம், எஸ்.ஜ.சி., சி.ஜ. எஸ்ஸார் ஹெளவுஸ், ஏ.இ.ஜி.ஐ. எஸ்., எல்.ஐ.சி, நார்த் போர்ட் சாலை, எ.டி.ஆர்.சி, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலக வளாகம், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, இந்தியன் வங்கி மற்றும் எச்எஸ்பிசி வங்கி கட்டடங்கள் ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்படும்.
செல்லாத ரூபாய் நோட்டுகள்: அறநிலையத்துறை தவிப்பு

Added : நவ 30, 2017 23:51

அறநிலையத்துறையில், 30 கோடி ரூபாய் செல்லாத நோட்டுகள் மாற்றப்படாமல், முடங்கி உள்ளன. அவற்றை என்ன செய்வது என தெரியாமல், அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
மத்திய அரசு, 2016 நவ., 8ல், 500 மற்றும், 1,000 ரூபாயை, செல்லாத ரூபாய் நோட்டுகளாக அறிவித்தது. அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள, போதிய அவகாசம் அளிக்கப்பட்டது. இதன்படி, கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை, அறநிலையத் துறை அதிகாரிகள் மாற்றினர். ஆனால், தற்போது அறநிலையத் துறையில், 30 கோடி ரூபாய் செல்லாத ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றை மாற்ற, ரிசர்வ் வங்கி வரை அதிகாரிகள் சென்றனர். 'அவகாசம் முடிந்து விட்டது; மாற்ற முடியாது' என, ரிசர்வ் வங்கி கைவிரித்து விட்டது. இதனால், இந்த பணத்தை என்ன செய்வது எனத் தெரியாமல், அறநிலையத்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

இது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற அவகாசம் முடிந்த பின், பக்தர்கள் வேறு வழியின்றி கோவில் உண்டியலில் போட்டுள்ளனர். அதுதான், 30 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது' என்றனர்.

இதுகுறித்து ஆன்மிக அன்பர்கள் கூறுகையில், 'உண்டியலில் விழுந்த நல்ல நோட்டுகளை, கமிஷன் அடிப்படையில் அதிகாரிகள் மாற்றிஉள்ளனர். இந்த, 30 கோடி ரூபாயும், இதுபோன்று மாற்றியதாக இருக்கலாம்' என்றனர்.

- நமது நிருபர் -

500 பேர், 'ஆப்சென்ட்' : அதிகாரி அதிர்ச்சி

Added : டிச 01, 2017 00:29

ஆர்.கே.நகர்: ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த ஓட்டுச்சாவடி அலுவலருக்கான பயிற்சி வகுப்பில், 500 பேர் பங்கேற்காதது, தேர்தல் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள், தண்டையார்பேட்டையில் உள்ள, அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், நேற்று நடந்தது. இதில், தேர்தல் பணிகளில் ஈடுபடும், மத்திய, மாநில அரசுத் துறை ஊழியர்கள், 1,700 பேர் பங்கேற்க வேண்டும். ஆனால், 1,200 பேர் மட்டுமே பங்கேற்றனர்;500 பேர் பங்கேற்கவில்லை. இதனால், தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


பயிற்சி வகுப்புகளை பார்வையிட, மாவட்ட தேர்தல் அதிகாரி, கார்த்திகேயன் வந்தபோது, பெண் அலுவலர் ஒருவர் தாமதமாக வந்தார். அவரின் அடையாள அட்டை ஆய்வு செய்து விட்டு, 'இனி, பயிற்சி வகுப்புக்கு முன் கூட்டியேவரவேண்டும்' என, அறிவுறுத்தினார்.


பின், கார்த்திகேயன் கூறுகையில், ''பயிற்சி வகுப்புகளுக்கு வராத ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இந்த பயிற்சி, நான்கு கட்டங்களாக நடக்க உள்ளது.
சிங்கப்பூருக்கு கிளம்புது ஆவின் பால்

Updated : டிச 01, 2017 02:14 | Added : டிச 01, 2017 01:28 |

ஆவின் நிறுவனத்தின், பதப்படுத்தப்பட்ட பால், இரு தினங்களில் சிங்கப்பூருக்கு விற்பனைக்காக செல்லவுள்ளது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தமிழகத்தில் விற்பனை செய்து வருகிறது.ஆவினின் வருவாயை பெருக்கும் விதமாக, ஆவின் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

மொபைல் ஆப் : அதன் ஒரு பகுதியாக, குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாலும், ஆறுமாதம் வரை கெட்டுப் போகாத, உயர் வெப்ப நிலையில் பதப்படுத்தப்பட்ட பால், சிங்கப்பூரில் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம், ஆவின் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது.
இன்னும் இரு தினங்களில், 'கன்டெய்னர்' மூலம், பதப்படுத்தப்பட்ட பால் சிங்கப்பூருக்கு விற்பனைக்காக அனுப்பப்படவுள்ளது.

இது குறித்து, ஆவின் மேலாண் இயக்குனர், காமராஜ் கூறியதாவது: ஆவினின் வருவாயை பெருக்குவதற்காக, சிங்கப்பூருக்கு பால் ஏற்றுமதி செய்யவுள்ளோம்.ஏற்றுமதி முகவர்கள் மூலம், சிங்கப்பூரில் உள்ள, 150 சில்லரை விற்பனையகங்களில், குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகள், வணிக வளாகங்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில், இந்த பால் விற்பனை செய்யப்படவுள்ளது.இது, சிங்கப்பூர் தர நிர்ணய ஆய்வு மையத்தால் ஆய்வு செய்யப்பட்டு விற்கப்படவுள்ளது.அங்குள்ள ஆவின் சில்லரை விற்பனையாளர்கள், 'மொபைல் ஆப்' மூலம், பால் கொள்முதல் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று லட்சம் லிட்டர் : இதுமட்டுமின்றி, ஆவின் எட்டு வகையான நறுமணப்பால், மோர் உள்ளிட்ட ஆவின் பொருள்களை, விரைவில் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யவுள்ளது. 20 ஆயிரம் லிட்டர் பால், இன்னும் இரு தினங்களில், கன்டெய்னர் மூலம், சிங்கப்பூர் செல்லவுள்ளது. ஒரு மாதத்திற்கு, 15 கன்டெய்னர் வரை, மூன்று லட்சம் லிட்டர் பால், ஏற்றுமதி செய்யப்படும்.விரைவில், மலேஷியா, மியான்மர், கம்போடியா, தாய்லாந்து, இந்தோனிஷியா உள்ளிட்ட, 11 தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு, பால் ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை, ஆவின் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-நமது நிருபர்-


 Flash News : கனமழை -15 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை 
அறிவிப்பு ( 01.12.2017)

திருவள்ளூர் மாவட்ட -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* தஞ்சாவூர் மாவட்ட  சேதுபாவாசத்திரம் ஒன்றிய தொடக்க பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - AEEO


* சேலம் மாவட்ட -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* திருவண்ணாமலை மாவட்ட -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* மதுரை மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

* நீலகிரி - 4 தாலுகா  பள்ளிகளுக்கு விடுமுறை (உதகை, கோத்தகிரி, குந்தா, குன்னூர்)

* காஞ்சிபுரம் -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* திண்டுக்கல் மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* சிவகங்கை மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை(சிவகங்கை, கிளையார்கோயில் மானாமதுரை , திருபுவனம் இளையான்குடி )

* விழுப்புரம் மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* சென்னை மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* தேனி மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* தூத்துக்குடி மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
* நெல்லை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

* கன்னியாகுமரி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

சபரிமலையில் பலத்த மழை; பக்தர்கள் சிரமம்

Added : டிச 01, 2017 05:16
 

சபரிமலை: சபரிமலையில் தொடர் மழை பெய்து வருவதால் பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

சபரிமலையில் தற்போது மண்டல கால பூஜை நடைபெற்று வருகிறது. நடை திறந்தது முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த சீசனில் அவ்வளவாக மழை இல்லை. ஆனால் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழை காரணமாக பம்பையில் இருந்து அப்பாச்சிமேடு வரை பாதை வழுக்கியதால், மெதுவாகதான் மலையேற முடிந்தது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வரமுடியாமல் சிரமப்பட்டனர். சன்னிதானத்தில் தங்குவதற்கும், நிற்பதற்கும் கூட இடமில்லாமல் சிரமப்பட்டனர். மழையால் நேற்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டதால் நேற்று வந்த பக்தர்களுக்கு நல்ல தரிசனம் கிடைத்தது.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...