Friday, December 1, 2017

500 பேர், 'ஆப்சென்ட்' : அதிகாரி அதிர்ச்சி

Added : டிச 01, 2017 00:29

ஆர்.கே.நகர்: ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த ஓட்டுச்சாவடி அலுவலருக்கான பயிற்சி வகுப்பில், 500 பேர் பங்கேற்காதது, தேர்தல் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள், தண்டையார்பேட்டையில் உள்ள, அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், நேற்று நடந்தது. இதில், தேர்தல் பணிகளில் ஈடுபடும், மத்திய, மாநில அரசுத் துறை ஊழியர்கள், 1,700 பேர் பங்கேற்க வேண்டும். ஆனால், 1,200 பேர் மட்டுமே பங்கேற்றனர்;500 பேர் பங்கேற்கவில்லை. இதனால், தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


பயிற்சி வகுப்புகளை பார்வையிட, மாவட்ட தேர்தல் அதிகாரி, கார்த்திகேயன் வந்தபோது, பெண் அலுவலர் ஒருவர் தாமதமாக வந்தார். அவரின் அடையாள அட்டை ஆய்வு செய்து விட்டு, 'இனி, பயிற்சி வகுப்புக்கு முன் கூட்டியேவரவேண்டும்' என, அறிவுறுத்தினார்.


பின், கார்த்திகேயன் கூறுகையில், ''பயிற்சி வகுப்புகளுக்கு வராத ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். இந்த பயிற்சி, நான்கு கட்டங்களாக நடக்க உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 31.01.2026