Friday, December 1, 2017

செல்லாத ரூபாய் நோட்டுகள்: அறநிலையத்துறை தவிப்பு

Added : நவ 30, 2017 23:51

அறநிலையத்துறையில், 30 கோடி ரூபாய் செல்லாத நோட்டுகள் மாற்றப்படாமல், முடங்கி உள்ளன. அவற்றை என்ன செய்வது என தெரியாமல், அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
மத்திய அரசு, 2016 நவ., 8ல், 500 மற்றும், 1,000 ரூபாயை, செல்லாத ரூபாய் நோட்டுகளாக அறிவித்தது. அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள, போதிய அவகாசம் அளிக்கப்பட்டது. இதன்படி, கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை, அறநிலையத் துறை அதிகாரிகள் மாற்றினர். ஆனால், தற்போது அறநிலையத் துறையில், 30 கோடி ரூபாய் செல்லாத ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றை மாற்ற, ரிசர்வ் வங்கி வரை அதிகாரிகள் சென்றனர். 'அவகாசம் முடிந்து விட்டது; மாற்ற முடியாது' என, ரிசர்வ் வங்கி கைவிரித்து விட்டது. இதனால், இந்த பணத்தை என்ன செய்வது எனத் தெரியாமல், அறநிலையத்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.

இது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற அவகாசம் முடிந்த பின், பக்தர்கள் வேறு வழியின்றி கோவில் உண்டியலில் போட்டுள்ளனர். அதுதான், 30 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது' என்றனர்.

இதுகுறித்து ஆன்மிக அன்பர்கள் கூறுகையில், 'உண்டியலில் விழுந்த நல்ல நோட்டுகளை, கமிஷன் அடிப்படையில் அதிகாரிகள் மாற்றிஉள்ளனர். இந்த, 30 கோடி ரூபாயும், இதுபோன்று மாற்றியதாக இருக்கலாம்' என்றனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 31.01.2026