Saturday, August 3, 2019

தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு மதிப்பூதியம்

Added : ஆக 03, 2019 01:39

சென்னை:லோக்சபா பொதுத் தேர்தலில் பணியாற்றிய, வருவாய் துறை ஊழியர்களுக்கு, மதிப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலர்களாக, உதவி தேர்தல் அலுவலர்களாக பணிபுரிந்த, மாவட்ட வருவாய் அலுவலர், தேர்தல் தாசில்தார், மண்டல தாசில்தார், தாசில்தார் போன்றோருக்கு, அவர்களின், ஒரு மாத அடிப்படை சம்பளம் அல்லது, 33 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், எது குறைவோ, அந்தத் தொகை வழங்கப்படும்.

பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு போன்றவற்றில் இருந்த, கோட்டாட்சியர், தாசில்தார், மாநகராட்சி கமிஷனர், நகராட்சி கமிஷனர் போன்றோருக்கு, ஒரு மாத அடிப்படை சம்பளம் அல்லது, 24 ஆயிரத்து, 500 ரூபாய்; இதில் எது குறைவோ, அது வழங்கப்படும்.

கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோருக்கு, அடிப்படை சம்பளத்தில், 50 சதவீதம் அல்லது, 17 ஆயிரத்து, 500 ரூபாய்; எது குறைவோ, அது வழங்கப்படும். கம்ப்யூட்டர் பணியாளர்களுக்கு, 17 ஆயிரத்து, 500 ரூபாய்; தேர்தல் தகவல் ஆப்பரேட்டர்களுக்கு, 7,000 ரூபாய், பிரிவு எழுத்தர்களுக்கு, 5,000 ரூபாய் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இத்தொகையை வழங்க, எவ்வளவு நிதி தேவை என்ற விபரத்தை, 10ம் தேதிக்குள் அனுப்பும்படி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு, கடிதம் அனுப்பி உள்ளார்.
பண்டிகை கால முன்பணம் உயர்வு

Added : ஆக 03, 2019 00:50

சென்னை:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பண்டிகை கால முன்பணம், 5,000 ரூபாயை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

'ஒரு அரசுக்கு அச்சாணியாக திகழ்பவர்கள், அரசு ஊழியர்கள். அவர்கள் நலனில், அக்கறை கொண்டது, ஜெயலலிதா அரசு.அந்த அடிப்படையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, தற்போது பண்டிகை கால முன் பணமாக, 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது, 10 ஆயிரம் ரூபாயாக, உயர்த்தி வழங்கப்படும்' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சட்டசபையில் அறிவித்தார்.

அதன்படி, பண்டிகை முன்பணமாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர், கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.
ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் நாளை ஆடித்தேரோட்டம்

Added : ஆக 03, 2019 02:07


ஸ்ரீவில்லிபுத்துார்:ஆண்டாள் கோயிலில் நாளை (ஆக.4 ) ஆடிப்பூர தேரோட்டம் நடக்கிறது.

ஜூலை 27ல் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் தினமும் காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவில் வீதிஉலா நடந்தது. இன்று மதுரை அழகர்கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோயில் பரிவட்டங்கள் கொண்டுவரபட்டு ஆண்டாளுக்கு சூட்டப்படுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்டம் நாளை(ஆக.4) நடக்கிறது. அன்றுஅதிகாலை 5:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. காலை 8:05 மணிக்கு தேரினை பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி துவங்குகிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடாக மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கோயிலுக்கு வந்துள்ளனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் செய்துள்ளனர்.

மருத்துவ படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம் கட்டணும்

Added : ஆக 03, 2019 01:24





சென்னை:'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளை பாதியில் கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான கவுன்சிலிங் முடிந்து விட்டது. இதில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பின. கல்லுாரியில் சேர்ந்த மாணவர்கள், படிப்பை பாதியில் கைவிட்டால், 1 லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை, அபராதம் விதிக்கப்படும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கை:அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு இடங்கள் பெற்ற மாணவர்கள், படிப்பை தொடர விரும்பாவிட்டால், இன்றைக்குள் இடத்தை திரும்ப ஒப்படைக்கலாம்.நாளை மற்றும் நாளை மறுநாள், படிப்பை கைவிடுவதென்றால், 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். மேலும், 6ம் தேதிக்கு மேல், படிப்பை கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

அதேபோல், பி.டி.எஸ்., படிப்பில் இடங்கள் பெற்றவர்கள், படிப்பை தொடர விரும்பாவிட்டால், நாளைக்குள் படிப்பை கைவிடலாம்.வரும், 5, 6ம் தேதிகளில் படிப்பை கைவிடுவதென்றால், 1 லட்சம் ரூபாய்; 7ம் தேதிக்கு மேல் படிப்பை கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
பி.ஆர்க்., கவுன்சிலிங் தேதிகள் அறிவிப்பு

Added : ஆக 03, 2019 00:53


சென்னை:பி.ஆர்க்., மாணவர் சேர்க்கைக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான, கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. இதில், 83 ஆயிரத்து, 396 இடங்கள் நிரம்பின. இதை தொடர்ந்து, 'ஆர்கிடெக்ட்' என்ற, கட்டட வடிவமைப்பு கலை படிப்புக்கு, மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 50க்கும் மேற்பட்ட, ஆர்கிடெக்ட் கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்பப்பதிவு, ஏற்கனவே முடிந்தது.

இதையடுத்து, கவுன்சிலிங் நடத்தும் தேதி, நேற்று அறிவிக்கப்பட்டது. வரும், 6ம் தேதி, கவுன்சிலிங் துவங்க உள்ளது. முதல் நாளில், சிறப்பு பிரிவினருக்கும், பின், 7 மற்றும் 8ம் தேதிகளில், பொது பிரிவு மாணவர்களுக்கும், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.சென்னை, தரமணியில் உள்ள, மத்திய பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் நடக்கும் கவுன்சிலிங்கில், மாணவர்கள் நேரடியாக பங்கேற்க வேண்டும். மதிப்பெண் விபரங்கள், ஜாதி மற்றும் பள்ளி சான்றிதழ்களை, முன்கூட்டியே தயார் செய்து கொள்ள வேண்டும்.மேலும் விபரங்களை, தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டியின், tneaonline.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
திருப்பதி லட்டின் வயது 302

Added : ஆக 03, 2019 00:00

திருப்பதி:திருமலை ஏழுமலையானுக்கு, பிரசாதமாக படைக்கப்படும், லட்டின் வயது, 302 வருடங்கள் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையானுக்கு, விசேஷ பிரசாதமாக படைக்கப்படுவது லட்டு. இந்த லட்டு, கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி ஆகியவைகளை, குறிப்பிட்ட அளவில் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.திருமலையில், தினசரி, 2 லட்சம் முதல், 3 லட்சம் எண்ணிக்கையில் லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுகிறது. உற்சவ நாட்களில், 5 லட்சம் லட்டுகள் வரை, சேமிப்பில் வைக்கப்படும்.

இந்த லட்டு நிவேதனம், ஏழுமலையானுக்கு, 1715ம் ஆண்டு, ஆக.2ல், துவக்கப்பட்டது. இந்நிலையில், லட்டு பிரசாதத்திற்கு, இன்று, 302 வயதாகிறது.கடந்த, 2009ல், திருமலை லட்டு பிரசாதத்திற்கு, புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது. லட்டு பிரசாத விற்பனை மூலம், தேவஸ்தானத்திற்கு, மாதம் ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. லட்டு படைத்ததற்கு முன், திருமலை ஏழுமலையானுக்கு, வடை முக்கிய பிரசாதமாக படைக்கப்பட்டு வந்தது.
Indian students win World Debating Championship

Five-member team from Chennai, Mumbai and Jaipur underwent gruelling preparation with varied research

03/08/2019, STAFF REPORTER,CHENNAI


Winning team: Saranya Ravindran, Bhavya Shah, Tejas Subramaniam, Prithvi Arun and Manya Gupta won the World Schools Debating Championships 2019 held in Thailand. R. Ragu

An Indian team emerged world champion at the World Debating Championships 2019, defeating Canada, with Tejas Subramaniam of the Padma Seshadri Bal Bhavan (PSBB) School, Chennai, adjudged the best speaker.

The five-member Indian team included Tejas Subramaniam (PSBB School), Bhavya Shah (a visually impaired student from the Rao Junior College of Science, Mumbai), Manya Gupta (Neerja Modi School, Jaipur), Saranya Ravindran (also from PSBB School, Chennai) and Prithvi Arun (Sri Sankara Senior Secondary School, Chennai). The tournament, which was held in Thailand, saw 600 participants from 64 nations, and the Indian team reportedly did not lose a single round. After an elaborate selection process, the five students were chosen by the Indian Schools Debating Society (ISDS) and trained for months.

Tejas Subramaniam, a Class XII student says, for seven months, they attempted 140 debates on various topics. “We had to research feminism, sports and environment, sit for training in video calls, and listen to lectures on finance and developmental economics. It was gruelling training but everything paid off in the end,” he said.

For Bhavya Shah, a Class XII student and the first visually impaired debater in an Indian team, the world of debating, rebuttal, reasoning and arguments were rather new before he applied to get on the team. In the quarter finals, the team faced Pakistan on the topic ‘This House supports China’s attempts at becoming a dominant global power’. When a member of the Pakistan team said they supported China as it was the Avengers of the global south, Mr. Shah, known for his humour, shot back, “If you think China are the Avengers, I marvel that.”

P.R. Venketrama Raja, Chairman of the Ramco Group, which sponsors the ISDS, said: “There should be reason rather than rhetoric and emotions. Debaters may have opinions, but since they have been trained to have both points of view, they may never get offended because someone is differing from their opinions.”

NEWS TODAY 14.02.2026