Monday, September 30, 2019

தற்கொலைக்கு முக்கிய காரணம் அனைவரது கைகளில் இருக்கும் செல்போன்: அரசு மனநல மருத்துவர் ஆனந்த் பிரதாப் எச்சரிக்கை





சென்னை 

தற்கொலைக்கு முக்கிய காரண மாக அனைவரது கைகளில் இருக் கும் செல்போன் உள்ளது என்று ராயப்பேட்டை அரசு மருத்துவ மனை ஆர்எம்ஓ மற்றும் மனநல மருத்துவர் ஆனந்த் பிரதாப் தெரிவித்தார்.
தமிழகத்தில் டாக்டர்கள் பணிச் சுமை உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின் றன. இந்நிலையில் டாக்டர்களிடம் தற்கொலை எண்ணத்தைப் போக்க, தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று நடை பெற்றது.
மருத்துவமனை கண்காணிப் பாளர் மணி தலைமை தாங்கினார். மருத்துவத் துறை பேராசிரியர் பரந்தாமன் வரவேற்புரை ஆற்றி னார். மருத்துவ இளநிலை, முது நிலை படிக்கும் மாணவ மாணவி யர், பயிற்சி டாக்டர்கள், டாக்டர் கள், பேராசிரியர்கள், உதவி பேரா சிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தற்கொலை தடுப்பு குறித்து மருத்துவமனை ஆர்எம்ஓ மற்றும் மனநல டாக்டர் ஆனந்த் பிரதாப் பேசியதாவது:

உலக அளவில் தினமும் 1 லட்சம் பேரில் 16 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒரு நிமிடத்துக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். பொதுவாக பணிச் சுமை, வேலை கிடைக்காதது, காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, சூழ்நிலை, மனநோய், கடன் தொல்லை, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பிரச்சினை போன்ற வற்றால் தற்கொலை முடிவுக்குச் செல்கின்றனர்.

முக்கியமாக நடிகர், நடிகை கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் தற்கொலை, மற்ற வர்களை தற்கொலைக்கு தூண்டு கிறது. இதற்கு முக்கிய காரணமாக செல்போன் உள்ளது. இப்போது அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது.

பிரபலங்களின் தற்கொலை குறித்த செய்தி மற்றும் புகைப் படங்கள் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பரவுவதற்கு செல்போன்தான் காரணம். இதன் மூலம் சிறிய பிரச்சினை என்றாலும், அந்த பிரபலமே தற்கொலை செய்து கொள்கிறார். நாம் தற்கொலை செய்து கொண்டால் என்ன என்ற எண்ணம் தோன்றுகிறது.
தற்கொலைக்கு முயற்சித்தவர் உயிர் பிழைத்தால், அவர் குற்ற உணர்ச்சியில் இருப்பார். வெளிநாடு களில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்வது கொள்வது அதிகமாக நடக்கிறது. ஆனால், நமது நாட்டில் பூச்சி மருந்து குடிப்பது, தூக்கு போடுவது, தூக்க மாத்திரை சாப்பிடுவது, கிணறு, ஆறு, கடல் மற்றும் பெரிய கட்டிடத்தில் மேல் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கின் றனர்.

இதில், பெரிய கட்டிடத்தின் மேல் இருந்து ஆண்கள்தான் அதிக அளவில் குதிக்கின்றனர். தற்கொலையைத் தடுக்க மன நல ஆலோசனைகள், மனநல மருத் துவ சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சை கள் உள்ளன. ஆனால், பலர் சிகிச்சையை, தொடர்ந்து எடுத் துக் கொள்வதில்லை. மருத் துவம் என்பது பணி இல்லை. இது ஒரு சேவை. டாக்டர்கள், பணியை சுமையாக நினைக்காமல், சேவை யாக கருதினால் தற்கொலை எண்ணம் வரவே வராது. கூடுதல் பணியாக இருந்தால், புதிதாக கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாக நினைத்து சந்தோஷமாக செய்ய வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ஆனந்த் பிரதாப் தெரிவித்தார்.

நிறைவாக மருத்துவத் துறை உதவி பேராசிரியர் உஷா நன்றி கூறினார்.

தொடரும் மருத்துவர்களின் தற்கொலைகள்: அரசு என்ன செய்ய வேண்டும்? 




சிவபாலன் இளங்கோவன்

உலக தற்கொலை தடுப்பு தினம் தொடர்பாகப் பல்வேறு நிகழ்ச்சிகளையும் கருத்தரங்கங்களையும் விழிப்புணர்வு முகாம்களையும் நாம் நடத்திக்கொண்டிருந்த அதே வேளையில், ‘வேலைச் சுமை தாங்க முடியாததால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்’ என்று எழுதிவைத்துவிட்டு ஒரு முதுகலை படிப்பு பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். ‘வேலைச் சுமை தாங்க முடியாததால்’ என்ற வரி நமக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

ஒரு தற்கொலை நடக்கும்போது நாம் அதற்கான காரணங்களை வைத்தே அந்தத் தற்கொலையை மதிப்பிடுகிறோம். தற்கொலைகளைத் தடுக்கும் பெரும் பணியில் நாம் இன்னும் தொடங்கிய இடத்திலேயே நிற்பதற்கு நமது இந்த அணுகுமுறைதான் காரணம். ஒன்று, தற்கொலைகளைப் புனிதப்படுத்துகிறோம் அல்லது மட்டம் தட்டுகிறோம். ‘இதெற்கெல்லாம் தற்கொலை செய்துகொள்ளலாமா?’ அல்லது ‘தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவளை விரும்பினான்’ என்பதுபோலவே நமது புரிதல்கள் இருக்கின்றன.

தடுக்க என்ன வழி?

உண்மையில், ஒரு தற்கொலை நிகழும்போது தற்கொலைக்கு உண்டான அந்தக் குறிப்பிட்ட மனநிலையையும், அந்தக் குறிப்பிட்ட மனநிலைக்கு அந்த மனிதன் வந்தடைந்த பாதையையும் பார்க்க வேண்டுமே தவிர, அதற்கான காரணங்களையோ, அந்நபரின் ஆளுமையையோ அல்ல. ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னாலும் மிக நீண்ட பாதையொன்று இருக்கிறது. அந்தப் பாதையில் நம்மையெல்லாம் கடந்துதான் அந்நபர் நிராதரவாகச் சென்றிருக்கிறார் என்பதை நாம் உணராத வரை தற்கொலைகளைத் தடுக்க முடியாது.

நெருக்கும் அதீதப் பணிச்சுமை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நிகழும் பாகுபாடுகள், வரம்பற்ற அதிகாரங்களைக் கொண்ட நிர்வாக அமைப்புகள் போன்றவற்றுக்கு எதிராக அண்மைக் காலங்களில் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டே வருகிறார்கள். கடந்த இரண்டாண்டுகளில் இந்த நெருக்கடிகளின் விளைவாகப் பயிற்சி மருத்துவர்களின் தற்கொலைகளும் ஆங்காங்கு நடந்துகொண்டே இருக்கின்றன. அந்தப் போராட்டங்களையும் தற்கொலைகளையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதாமல் பொதுச் சமூகமும் கடந்துசெல்வதற்குக் காரணம், இதைப் பயிற்சி மருத்துவர்களின் தனிப்பட்ட பிரச்சினையாகவும், அந்த மருத்துவரின் தனிப்பட்ட பலவீனமாகவும் புரிந்துகொள்வதால்தான். உண்மையில், இது அவர்களது தனிப்பட்ட பிரச்சினை அல்ல. மருத்துவக் கல்லூரிகளில் நிகழும் ஆரோக்கியமற்ற சூழலே இதுபோன்ற தொடர் தற்கொலைகளுக்குக் காரணம்.


ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு நாளில் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகள் வருகின்றனர். ஆனால், அத்தனை பேரையும் எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவர்களின் எண்ணிக்கையும் மருத்துவக் கட்டமைப்பும் அங்கு இல்லை. ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகிற நோயாளிகளின் முதல் தொடர்பே பயிற்சி மருத்துவர்கள்தான். மூத்த மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்குமான நேரடி உரையாடல் என்பது மிக மிக அரிது. அப்போது அந்த நோயாளியின் வைத்தியம் தொடர்பாக அந்த மருத்துவமனையில் இருக்கும் போதாமைகளால் அந்தப் பயிற்சி மருத்துவரே நேரடியாகப் பாதிக்கப்படுகிறார். அதனால்தான், மருத்துவர்களுக்கு எதிரானப் பொதுமக்கள் ஈடுபடும் வன்முறைகளில் தாக்கப்படுவது பெரும்பாலான நேரத்தில் பயிற்சி மருத்துவர்களாகவே இருக்கின்றனர். ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் அடிப்படை வசதிகளின் போதாமைகளுக்குப் பயிற்சி மருத்துவரே நேரடியாகப் பலியாகும் சூழல்தான் இங்கு இருக்கிறது. ‘அரசுப் பள்ளி சரியில்லை என்றால், அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்தான் காரணம்’ என்ற மேலோட்டமான புரிதல்போலவே ‘அரசு மருத்துவமனை சரியில்லை என்றால், அரசு மருத்துவர்தான் காரணம்’ என்ற புரிதல்தான் இருக்கிறது. இந்த மனப்பான்மையை ஊதிப் பெருக்குவதன் வழியாக அரசு நழுவிக்கொள்கிறது.

அயற்சியூட்டும் பயிற்சி மருத்துவப் பணி


ஒரு பயிற்சி மருத்துவரின் பணி என்பது நிச்சயம் உடலளவிலும் மனதளவிலும் அயற்சியானது. வாரத்துக்கு இருமுறை கிட்டத்தட்ட முப்பத்தாறு மணி நேரத் தொடர் பணி, தூக்கமின்மை, மூத்த மருத்துவர்களின் கேலிப்பேச்சுகள், அதிகாரம், பாரபட்சம், பிற பணியாளர்களின் ஒத்துழையாமை போன்றவற்றுக்கு இடையேதான் அவர்கள் நோயாளிகளுக்கு வைத்தியம் செய்ய வேண்டும். ஓய்வற்ற, நெருக்கடியான மனநிலையில் அவர்கள் செய்யும் சிறு தவறுகள்கூட நோயாளிகளின் உடல்நிலையைப் பாதிக்கக்கூடியது. அப்படி நேரும் தவறுகள் இன்னும் அவர்களது மனநிலையை மோசமாக்கும். 


சமீபத்தில் நிகழ்ந்த ஆய்வுகளின்படி கிட்டத்தட்ட முப்பதிலிருந்து ஐம்பது சதவீதப் பயிற்சி மருத்துவர்கள் தீவிர மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஆறில் ஒரு பயிற்சி மருத்துவருக்குத் தற்கொலை எண்ணம் இருக்கிறது என்பது அதிர்ச்சியூட்டும் விஷயம். அதீதப் பணிச்சுமையும் ஆரோக்கியமற்ற சூழலும்தான் அவர்களின் மனரீதியான பிரச்சினைகளுக்கு முதன்மையான காரணம்.

என்ன செய்ய வேண்டும்?

ஒரு பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்துகொள்ளும்போது, அதை அவரின் தனிப்பட்ட ஆளுமைக் குறைபாடாகச் சித்தரிப்பதை விட்டுவிட்டு, திறந்த மனதுடன் அதற்கான காரணங்களை ஆராய வேண்டும். பயிற்சி மருத்துவர்களின் பணிகள் முறைப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கான ஓய்வையும் இளைப்பாறும் வழியையும் உறுதிசெய்ய வேண்டும். ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் பயிற்சி மருத்துவர்களுக்கான சுதந்திரமான, அதிகாரத் தலையீடுகள் எதுவுமற்ற குறைதீர்ப்பு மற்றும் ஆலோசனை அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும்.

பல்வேறு கலை, இலக்கிய விழாக்கள் கல்லூரி நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்குத் தகுந்த மருத்துவர்கள் நிரப்பப்பட வேண்டும். மூத்த மருத்துவர்களுக்கும் பயிற்சி மருத்துவர்களுக்குமான உறவை மேம்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டும். ஒரு மருத்துவமனை எந்த அளவுக்கு அதன் மருத்துவர்களுக்கும் பயிற்சி மருத்துவர்களுக்கும் சாதகமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது நோயாளிகளுக்கும் சாதகமானதாக இருக்கும். அப்படி ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கிக்கொடுப்பதுதான் ஒரு நல்ல அரசுக்கான முதல் கடமை.

- சிவபாலன் இளங்கோவன்,

மனநல மருத்துவர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: sivabalanela@gmail.com

Sunday, September 29, 2019

டீனுக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு மனு

Added : செப் 29, 2019 05:57


தேனி: 'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட பிரச்னையில் கொலைமிரட்டல் வருவதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும்' என தேனி மருத்துவக்கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் மனு அளித்துள்ளார்.அதில், 'நீட் ஆள்மாறாட்ட புகார் விசாரணை, கைது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் எனக்கும், குடும்பத்திற்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. கொலை மிரட்டல் வருகிறது. போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு கோருவதற்கான முகாந்திரம், எந்த வகையில் அச்சுறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் வந்தது, அதற்கான ஆதாரங்கள் குறித்து போலீசார் விசாரித்தனர்.

என்.டி.ஏ.வுக்கு கடிதம் விபரம் கேட்கிறது சி.பி.சி.ஐ.டி.

Added : செப் 28, 2019 23:38

தேனி, :தமிழகத்தில் இருந்து ஒரே பெயர், முகவரியில் 'நீட்' தேர்வு எழுதியோர் விபரத்தை கேட்டு தேசிய தேர்வு முகமைக்கு (என்.டி.ஏ.) சி.பி.சி.ஐ.டி. கடிதம் அனுப்பியுள்ளது.சி.பி.சி.ஐ.டி., போலீசார் வெளியிட்ட அறிக்கை:'நீட் ' ஆள்மாறாட்ட வழக்கின் முதல்கட்ட விசாரணையில் உதித்சூர்யா, தந்தை டாக்டர் வெங்கடேசன், எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லுாரியில் சேர்ந்த பிரவின், தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். பிற கல்லுாரியில் மோசடியாக 'சீட்' பெற்றதாக கூறப்படும் ராகுல், அபிராமி, பெற்றோரிடம் விசாரணை நடக்கிறது.தமிழகத்தில் உள்ள அனைத்து 'நீட்' பயிற்சி மையங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு, அங்கிருந்து தேர்வு பெற்றவர்களின் விபரம் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களில் ஒரே பெயர், முகவரியில் ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் விபரம் கேட்டு 'நீட்' தேர்வை நடத்தும் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதித்சூர்யா வருகை பதிவேட்டில் திருத்தம் :பேராசிரியர்கள் மீது போலீசில் புகார்

Added : செப் 28, 2019 23:34

தேனி, :'நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய மாணவர் உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டை திருத்திய பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தேனி அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார்.ஆள் மாறாட்ட பிரச்னை துவங்கியதில் இருந்தே தேனி மருத்துவ கல்லுாரி பற்றி பல்வேறு புகார்கள் கிளம்பின. உதித் சூர்யா செப்.11ல், 'படிக்க விரும்பமில்லை' என கடிதம் கொடுத்துவிட்டு கல்லுாரியை விட்டு வெளியேறினார். அவருக்கு அன்று வருகை பதிவேட்டில் 'பிரசன்ட்' போடப்பட்டிருந்தது. இது செப்.19ல் திருத்தப்பட்டு 'ஆப்சென்ட்' என போடப்பட்டிருந்தது.இக்குளறுபடி நாளிதழ்களில் வெளியானது. இதைத்தொடர்ந்து மருத்துவக் கல்லுாரி உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாணவரின் வருகை பதிவேடு திருத்தியது குறித்து விவாதிக்கப்பட்டு அதில் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டது.போலீசில் புகார்'உதித்சூர்யாவின் வருகை பதிவேட்டை திருத்திய கல்லுாரி பேராசிரியர் வேல்முருகன், உதவி பேராசிரியர் திருவேங்கடம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நேற்று தேனி மருத்துவக்கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் நேற்று போலீசில் புகார் அளித்தார்.இப்புகார் 'நீட்' ஆள் மாறாட்ட வழக்கை விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றப்பட உள்ளது.
ஒரே கல்லூரியில் படித்த மாணவர்கள் 'நீட்' மோசடி புரோக்கரிடம் சிக்கிய கதை

Added : செப் 28, 2019 23:34


தேனி:மருத்துவக்கல்லுாரிகளில் சேர மாணவர்களின் பெற்றோர் மோசடியான புரோக்கரிடம் சிக்கியது எப்படி என தகவல் வெளியாகி உள்ளது.'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட புகாரில் சிக்கிய மாணவர்கள் உதித் சூர்யா, பிரவின், ராகுல், அபிராமி, இர்பான் ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை பிரிஸ்ட் மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்தனர். இரண்டாம் ஆண்டு செல்ல இருந்த நிலையில் இக்கல்லுாரிக்கு அரசு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் மாணவர்கள் வெளியேறினர்.ஒரே கல்லுாரியில் இவர்கள் படித்ததாலும், அனுமதி ரத்தான பிரச்னையாலும் இவர்களின் தந்தையர் நண்பர்களாகினர். ஒரு மாணவரின் தந்தையை புரோக்கர் ஒருவர் நாடியுள்ளார். இவர் தனக்கு செல்வாக்கு உள்ளதாகவும், பணம் கொடுத்தால் மருத்துவக்கல்லுாரியில் 'சீட்' வாங்கி தருவதாகவும் கூறினார்.இதை நம்பி அனைவரும் முறைகேட்டில் ஈடுபட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிந்துள்ளது.
முத்திரை இல்லாத, 'செக்' ஓய்வு பெற்றோர் பரிதவிப்பு

Added : செப் 28, 2019 19:17


சேலம்: ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கிய காசோலைகளில், 'ஹோலோகிராம்' முத்திரை இல்லாததால், வங்கிகள் திருப்பி அனுப்புகின்றன.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, 2018 ஏப்ரல் முதல், 2019 மார்ச் வரை, ஓய்வு பெற்ற, 6,283 தொழிலாளர்களின் பண பலன்களுக்காக, 1,093 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கீடு செய்தது.
இத்தொகையை, கோட்ட வாரியாக, விழா நடத்தி, அமைச்சர்கள் வழங்கி வருகின்றனர்.கடந்த, 22ல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த,
ஓய்வு பெற்ற, 610 தொழிலாளர்களுக்கு, சேலம் கோட்ட, தலைமை அலுவலகத்தில், 123.63 கோடி ரூபாய் காசோலைகளை, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
வழங்கினார்.ஆனால், காசோலைகளில், 'ஹோலோகிராம்' எனும் முத்திரை இல்லை. இதனால், அதை வங்கியில் ஏற்காமல், திருப்பி அனுப்பினர். சேலம் மட்டுமின்றி, பிற கோட்டங்களிலும், இதே நிலை ஏற்பட்டதால், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.
அவர்கள் கூறுகையில், 'பழைய முறையில், காசோலை வழங்கியதால், வங்கி அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர். எனவே, நேரடியாக, வங்கி கணக்கில் செலுத்த அமைச்சர் விஜயபாஸ்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...