புதுவையில் முக்கிய விழாக்கள் காலத்தில் அந்த விழாக்கள் 20–ந் தேதிக்கு முன் வந்தால் அந்த மாதத்திற்கான சம்பளத்தை விழாவுக்கு முன்பு வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கிடைய தீபாவளி பண்டிகை வருகிற 22–ந் தேதி வருகிறது.
இதையொட்டி ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் சம்பளத்தையும் முன்கூட்டியே வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வருகிற 20–ந்தேதி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment