Monday, November 24, 2014

ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளுக்கு இ-விசா திட்டம்



புதுடில்லி:ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளுக்கு இணையதளம் மூலம் இ-விசா வழங்கும் திட்டம் நவம்பர்-27 முதல் அறிமுகப்படுத்தபட உள்ளதாக தெரியவந்துள்ளது.இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடன் சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளனர்.முதற்கட்டமாக, ரஷ்யா, பிரேசில் ஜெர்மனி, தாய்லாந்து, உக்ரைன், ஜோர்டான், நார்வே, மொரிஷியஸ் மற்றும் அரபு நாடுகளுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்த உள்ளதாகவும் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

நீண்ட கால திட்டம்:

சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக இத்திட்டத்தினை கொண்டு வர வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை எழுந்து வந்த சூழலில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக இருக்கும் என இந்திய சுற்றுலா கழக தலைவர் சுபாஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கோவா ஆகிய சர்வதேச விமான நிலையங்களிலுமு் இத்திட்டத்தை செயல்படுத்த முழு ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

4 நாட்களில் இ-விசா:

இத்திட்டத்தினால் மேற்கூறிய 43 நாடுகளிலிருநது இந்தியா வரும் பயணிகள், விமான நிலையத்தில், இதற்கான வலைதளத்தில் கட்டணம் செலுத்தி நான்கு நாட்களில் இ-விசாவை பெற்றுக்கொள்ளலாம்.முன்னதாக, தென்கொரியா, ஜப்பான், பின்லாந்து, சிங்கப்பூர், நியூசிலாந்து உள்ளிட்ட 13 நாடுகளுக்கு ஆன்லைன் விசா திட்டத்தினை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த வசதியால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு நிச்சயம் வரப்பிரசாதமாக இருக்கும்.கடந்த ஜனவரி முதல்-நவம்பர் வரை 51.79 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வந்து சுற்றுப்பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinamalar 24.11.2014 

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...