Thursday, October 1, 2015

9-ம் வகுப்பு வரை விடைத்தாள் மதிப்பிட உதவும் வலைதளங்கள் S.தாமோதரன்

Return to frontpage

மாணவர்களுக்குக் காலாண்டுத் தேர்வுகள் முடிந்துவிட்டன. தேர்வை எழுதி முடித்த திருப்தியோடு மாணவர்கள், விடுமுறையைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் ஆசிரியர்களுக்கு இப்போதுதான் வேலையே தொடங்கி இருக்கிறது. விடுமுறையில்தான் எல்லா ஆசிரியர்களுக்கும் விடைத்தாள்களைத் திருத்தி, ஒவ்வொரு மாணவருக்கும் ரேங்க் / கிரேடுகளைப் போடும் வேலை இருக்கும். இணைய யுகத்தில் எல்லாமே எளிதாகிவிட்ட நிலையில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவும் எளிதான வழிமுறைகள் வந்துவிட்டன.

1 முதல் 8- ஆம் வகுப்பு வரையிலான மதிப்பெண்கள் மதிப்பீடு

www.way2cce.com என்ற இணையதளத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை மதிப்பீடு செய்ய முடியும். உங்கள் பள்ளியின் பெயர், மாவட்டத்தின் பெயர், பின்கோடு, மதிப்பெண் ஆகியவற்றைப் பதிவு செய்தாலே போதுமானது. கடவுச் சொல்லை உருவாக்கி நமது ஐடியைப் பதிவு செய்த உடனே FA, SA, Total Grade ஆகிய எல்லாவற்றையும் அதுவாகவே செய்து சமர்ப்பித்து விடுகிறது. இதை ஆன்லைனில் மட்டுமே பயன்படுத்தமுடியும்.

9-ம் வகுப்புக்குப் பயன்படும் மதிப்பீட்டுக் கருவி

ஒன்பதாம் வகுப்பிற்குப் பயன்படும் இந்த மதிப்பீட்டுக் கருவி மைக்ரோசாஃப்ட் எக்ஸல்ஷீட்டில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. http://www.kalvisolai.info/2012/08/kalvisolai-cce.html என்ற இணைப்புக்குச் சென்று இதனை இலவசமாகத் தரவிறக்கம் செய்ய முடியும்.

அதில் மாணவர்களைப் பற்றிய விவரம், மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்தால், மிக எளிதாகவும் விரைவாகவும் மதிப்பீட்டு விவரங்களைப் பெற முடியும். அப்படியே பிரிண்ட் எடுத்து சமர்ப்பித்து விடலாம். இது அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்துவதற்கு இணையம் தேவையில்லை; கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஒரு முறை இதனை உங்கள் கணினியில் நிறுவினால் போதும். அப்படியே பயன்படுத்தலாம்.

பொதுவான செயலி

'சிசிஇ கிரேடு கால்குலேட்டர்' என்கிற ஆன்ட்ராய்ட் செயலியைப் பயன்படுத்தியும் கிரேடைக் கண்டுபிடிக்கலாம். இதுவும் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியரின் கண்டுபிடிப்பே. உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.

இதைப் பயன்படுத்த https://play.google.com/store/apps/details?id=com.cce.perumalraj.layout1&hl=en என்ற இணைப்பைச் சொடுக்கவும். இந்த செயலி மூலம் மதிப்பெண்களை வைத்து, FA, SA, Total Grade மற்றும் மொத்த மதிப்பெண்களைக் கண்டறிய முடியும்.

அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், மெலட்டூர்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...