Sunday, August 27, 2017

தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளில் முதியோர் உதவித்தொகை பயனாளிகள் 50 சதவீதம் பேரின் பெயர் நீக்கம்

2017-08-27@ 02:04:08



வேலூர் : தமிழகத்தில் சொந்த நிலம், வீடு இல்லாமல் 60 வயதை கடந்த ஆதரவற்றோர், கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ₹1,000 வழங்கப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகளின் சிபாரிசு கடிதத்தால் வசதி படைத்தோரும் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தனர். இதனால்
அரசுக்கு பல கோடி ரூபாய் செலவு ஏற்பட்டு வந்தது. உண்மையான பயனாளிகளை கண்டறிய அதிகாரிகளை கொண்ட தனிப்படை அமைத்து வீடு வீடாக சென்று விசாரணை நடத்தியும் பயனில்லை. இதனால் போலியானவர்கள் அரசு உதவித்தொகை பெறுவதை தடுக்க முடியாமல் அதிகாரிகள் குழம்பி வந்தனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதற்காக குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், புகைப்படம், ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகிய தகவல்கள் அனைத்தும் பாயின்ட் ஆப் சேல் கருவி மூலம் பதிவேற்றப்பட்டது.

அப்போது, குடும்பத்துடன் வசித்துக்கொண்டு முதியோர் உதவித்தொகை பெற்று வந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெயர்கள் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. அவ்வாறு தமிழகம் முழுவதும் முதியோர் உதவித்தொகை பெற்று வந்தவர்கள் 50 சதவீதம் பேரின் பெயர்கள் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குடும்ப உறுப்பினர்களில் யார் முதியோர் உதவித்தொகை வாங்குகிறார்களோ அவர்களின் பெயர் இல்லாமல்தான் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டுகளில் இருந்த முதியோர் உதவித்தொகை பயனாளிகள் பெயர் பட்டியலை அந்தந்த மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது 50 சதவீதம் பேருக்கு முதியோர் உதவித்தொகையும் கட் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...