Saturday, August 26, 2017

வட தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

ர.பரத் ராஜ்

கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்து வரும் நிலையில், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



அதேபோல, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி நீடிப்பதால் இன்று மழைக்கு அதிக வாய்ப்பு இருக்கும் எனப்படுகிறது. மேலும், இதுவரை தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழையால் 22.1 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...