Wednesday, August 23, 2017

பட்டய கிளப்பும் ஜியோ..! நாளை முதல் அனைவருக்கும் இலவச போன்...! அசத்தும் அம்பானி ..!




ஜியோவின் இலவச போனை பெறுவதற்கு நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது

அதாவது, ஜியோ மேலும் ஒரு புரட்சியை உருவாக்க தொடங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் புது புது அறிவிப்பு வெளியிட்டு வருகிறது ஜியோ. ஜியோவின் எந்தொரு அறிவிப்பாக இருந்தாலும் மக்களுக்கு சலுகையாகத்தான் தெரிகிறது.

ஜியோ ஸ்மார்ட் போன்

ஜியோ தற்போது , INDIA KA SMARTPHONE (JIO PHONE ) என்ற போனை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இலவசமாக என்றால்எவ்வளவு பெரிய விஷயம்.அதற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது

ரூ .1500 இல் (INDIA KA SMARTPHONE (JIO PHONE )

ஜியோவின் இந்த ஸ்மார்ட் போனை இலவசமாக பெறுவதற்கு முதலில் 1500 ரூபாய் கட்ட வேண்டும்.பின்னர் நீங்கள் வாங்கிய தேதியிலிருந்து அடுத்த 3 ஆண்டுகள் கழித்து, அந்த ரூ.1500 -ஐ திருப்பிக்கொடுத்துவிடும் ஜியோ.

இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி , ஜியோவின் ஸ்மார்ட்போனை பெற ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் (நாளை ) முதல் முன்பதிவு செய்யலாம் என இஷா அம்பானி அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

எப்படி முன்பதிவு செய்வது ?

ஜியோவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பார்ம் பூர்த்தி செய்து , ஜியோவின் இலவச போனை பெறலாம்.

அல்லது அருகில் உள்ள ஜியோ ஷோ ரூம் உங்கள் பதிவை உறுதி செய்யலாம் அல்லது my jio app மூலமாகவும் முன்பதிவை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது .
Dailyhunt

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...