Monday, October 23, 2017

ஜெர்மன் தம்பதியரின் செல்ல நாய் மீட்பு?

ஜெர்மன் தம்பதியரின் செல்ல நாய் மீட்பு?
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர், ஸ்டீபன் சுக்ராஹ். இவரது மனைவி ஸ்டெபன் சுஹேரா. இவர்கள், 'லாப்ரடார்' வகையைச் சேர்ந்த, 'லுாக்' என்ற நாயுடன், சென்னைக்கு சுற்றுலா வந்தனர்.

கடந்த ஜூலையில், மெரினா கடற்கரையில், இவர்களது காரில் இருந்த நாய் லுாக், காணாமல் போனது. பல்வேறு இடங்களில் தேடியும், நாய் கிடைக்காததால், அவர்கள் ஜெர்மன் திரும்பிச் சென்றனர். தற்போது, 100 நாட்களுக்கு பின் அந்த நாய், மெரினா கடற்கரையில், இளைஞர் ஒருவரிடம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

அந்த நாய், லுாக் தானா என்பதை அறிய, ஜெர்மன் தம்பதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள், இன்று, சென்னை வந்து உறுதிப்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
-நமது நிருபர்-

No comments:

Post a Comment

NEWS TODAY 02.01.2026