Sunday, October 29, 2017

'உடனிருந்து கவனிக்க யாருமில்லை' தற்கொலைக்கு முயன்ற 3 முதியோர்



மயிலாடுதுறை, வயோதிகத்தில் உள்ள தங்களை உடனிருந்து கவனிக்க யாரும் இல்லாத கவலையில், தம்பதி உட்பட மூவர், தற்கொலைக்கு முயன்றனர். இச் சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகை மாவட்டம், சீர்காழியில் வசிப்பவர் சக்கரபாணி, 73; வருமானவரித் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள், மகனுக்கு திருமணமாகி, வெளியூர் மற்றும் வெளிநாட்டில் உள்ளனர். இதனால், சக்கரபாணி, மனைவி சுகுணலதா, 63 மற்றும் தன் சகோதரி 
இந்திராபாய், -65; உடன் தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில், இவர்களது வீடு, நேற்று காலை வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கதவை உடைத்து, போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.வீட்டுக்குள் சக்கரபாணி தம்பதி மற்றும் சகோதரி ஆகிய மூவரும் மயங்கி கிடந்தனர். 
அவர்களை மீட்டு, சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சைக்கு 
பின், மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தங்களை உடனிருந்து கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததாலும், மகன், மகள் மற்றும் பேரக்
குழந்தைகளை பார்க்க முடியாத ஏக்கத்திலும், மூவரும் விஷம் 
அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 3.4.2025