Sunday, October 29, 2017


நிறைவேறாத ஆசை: 2.0 விழாவில் வெளிப்படுத்திய ரஜினி!


By எழில்  |   Published on : 28th October 2017 03:45 PM  
rajini_audio122xx


ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் நேற்று நடைபெற்றது. படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. அவற்றில் இரு பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்த விழாவில், முதலில் தமிழில் நீண்ட நேரம் பேசிய ரஜினி பிறகு தெலுங்கு, ஹிந்தியிலும் பேசினார். பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் ரஜினியிடன் ஹிந்தியில் கேள்விகள் எழுப்பினார்.
நிறைவேறாத ஆசை உள்ளதா என ரஜினியிடம் கேட்டார் கரண் ஜோஹர். ஆம்... நிறைவேறாத ஆசை ஒன்று உள்ளது. பார்க்கலாம், என்ன நடக்கப்போகிறது என... என்று அக்க்கேள்விக்குப் பதில் அளித்தார் ரஜினி. 
அரசியல் பிரவேசத்தை மறைமுகமாகக் குறிப்பதால் ரஜினியின் இந்தப் பதிலுக்கு ரசிகர்கள் அமோக ஆதரவளித்தார்கள்.

No comments:

Post a Comment

NBEMS to train doctors in AI, ML

 NBEMS to train doctors in AI, ML  Sonal.Srivastava@timesofindia.com 05.01.2026 The National Board of Examinations (NBEMS) has recently anno...