பிரபல நகை கடை மீது போலீசில் மோசடி புகார்
பதிவு செய்த நாள்
23அக்2017
22:01
சென்னை: தங்க நகை சேமிப்பு திட்டத்தில், பல லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக, 'நாதெல்லா ஜூவல்லர்ஸ்' தங்க நகை கடை மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.
சென்னை, பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர், செல்வராஜ். இவர் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் நேற்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:
சென்னையில், தி.நகர், புரசைவாக்கம், வேளச்சேரி என, எட்டு இடங்களில், 'நாதெல்லா ஜூவல்லர்ஸ்' என்ற, தங்க நகை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் அறிவிக்கப்பட்ட, தங்க நகை சேமிப்பு திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து, மாதம், ஆயிரத்தில் இருந்து, 10 ஆயிரம் ரூபாய் என, பல லட்சம் ரூபாய், தவணைத்தொகை கட்டி வந்தோம். 10 முதல், 15 மாதத்திற்குள், கட்டிய பணத்திற்கு தங்க நகை தருவதாக உறுதி அளித்து இருந்தனர்.
ஆனால், 15 மாதங்களுக்கு மேலாகியும் தங்க நகை தரவில்லை. இதுபற்றி, நிர்வாகிகளிடம் கேட்டோம். நகைக்கு பதிலாக, கட்டிய பணத்திற்கு காசோலை தருவதாக கூறினர். அந்த காசோலையும் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. இதுபற்றி, போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. அதனால், கடை நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புரசைவாக்கம் பகுதியில், 'நாதெல்லா ஜூவல்லர்ஸ்' கடை நேற்று, திடீரென மூடப்பட்டது. அதனால், அந்தக்கடை முன் ஏராளமானோர் திரண்டனர். சில இடங்களில், அந்த கடைகள் முன், பணம் கட்டி ஏமாந்தோர் போராட்டமும் நடத்தினர்.

No comments:
Post a Comment