Wednesday, October 25, 2017

பேரறிவாளன் சிறையில் அடைப்பு

வேலுார்: ராஜிவ் கொலை வழக்கு கைதி பேரறிவாளன், இரண்டு மாத பரோல் முடிந்து, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறி வாளன், வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
அவரது தந்தை ஞானசேகரன், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு, ஆக., 24ல், ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில், பேரறிவாளன் தங்கியிருந்தார். பின், பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. நேற்றுடன் பேரறிவாளன் பரோல் முடிந்தது. திருப்பத்துார், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் ஜோலார்பேட்டை சென்ற போலீசார், பேரறிவாளனை அழைத்து வந்து, மாலை, 5:00 மணிக்கு, வேலுார் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.01.2026