Monday, October 23, 2017

கழிப்பறை இல்லையா.. பெண் கிடைக்காது..


கழிப்பறை,இல்லையா,பெண்,கிடைக்காது
பாக்பத் : உத்தர பிரதேசத்திலுள்ள கிராம பஞ்சாயத்து ஒன்றில், 'கழிப்பறை இல்லாத வீட்டாருக்கு, மகள்களை திருமணம் செய்து தர மாட்டோம்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலம் பாக்பட் மாவட்டத்திலுள்ள பிக்வாடா கிராமத்தில், திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலையை உருவாக்குவதில், மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக, கழிப்பறை இல்லாத வீட்டாருக்கு, மகள்களை திருமணம் செய்து தர மாட்டோம் என, கிராம பஞ்சாயத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
பஞ்., தலைவர், அரவிந்த் கூறுகையில், ''திறந்த வெளியில் மலம் கழித்தல், பெண்களின் கண்ணியத்தை குலைக்கும் செயல். வீட்டில் கழிப்பறை கட்ட, அரசு நிதியுதவி கிடைக்கிறது. எனவே, எங்கள் தீர்மானத்தை மீறி நடப்பவர்களை, ஊரை விட்டு ஒதுக்கி வைப்போம்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.01.2026