Monday, October 23, 2017

'டெங்கு' கொசுக்கள் உற்பத்தி : மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்

சேலம்: டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த சேலம், சண்முகா மருத்துவமனைக்கு, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ் தலைமையில் அதிகாரிகள், அஸ்தம்பட்டி மண்டலம், 13வது வார்டில் உள்ள சண்முகா மருத்துவமனையில், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அங்குள்ள உணவகத்தில், டெங்கு கொசுக்களை பரப்பும்வகையில், கேன்கள் திறந்த நிலையில் இருந்தன. அவற்றில் தேங்கி இருந்த நீரில், டெங்கு கொசு புழுக்கள் அதிகஅளவில் காணப்பட்டது.குடிநீர் தொட்டியில், கொசு புழுக்களுடன், பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகள் பாதுகாப்பை உறுதி செய்யாமல் செயல்பட்டது தெரிந்தது. இதனால், ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும், அபாய மருத்துவ கழிவை முறையாக அப்புறப்படுத்தாமல், அருகில் உள்ள மாநகர ஓடையில் கொட்டி அசுத்தம் செய்ததற்கு, ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கான நோட்டீஸ், மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. மேலும், மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வந்த, மூன்று குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.இது தவிர, மேலும் பல இடங்களில், டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த மருத்துவமனை, நுாற்பாலைகள்,தேநீர் விடுதிகளில் சோதனை நடத்தி, 14.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, 10 குடிநீர் இணைப்புகளை அதி
காரிகள் துண்டித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 02.01.2026