Wednesday, October 25, 2017

ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாடா? மருந்து மாத்திரை இல்லாமல் சரி செய்வது எப்படி?

Published on : 24th October 2017 03:10 PM  |
mental-alert


ஹீமோகுளோபின் குறைபாடு அதாவது ரத்த சோகை ஏற்பட்டால் உடல் முழுவதும் செயலிழந்ததை போல் இருக்கும். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் பிராண வாயுவான ஆக்ஸிஜனை கொண்டு சேர்க்கும் ரத்த அணுக்களின் அளவு குறைவதால் சோர்வு ஏற்படும். இதனால் சிறுநீரக பிரச்னை வருவதற்கான வாய்ப்பும் ஏற்படுகிறது. இதில் இருந்து தீர்வு பெற எந்தவொரு மாத்திரை மருந்தும் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவிலேயே ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க முடியும். காய்கறிகளுடன் சேர்த்து சில பழங்களையும் சாப்பிடுவது மேலும் சீரான உடற்பயிற்சி போன்றவையே இதற்கு போதுமானது.
1. கொய்யா:
தினமும் கொய்யாப் பழம் சாப்பிடுவதன் மூலம் ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எவ்வளவு கசப்பாக கொய்ய இருக்கிறதோ அதில் அவ்வளவு ஹீமோகுளோபினை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கிறது என்று அர்த்தம். மிகவும் சத்தான மற்றும் அதிக பயன்களை கொண்ட ஒரு பழம் இது. 
2. மாம்பழம்:
பழ வகைகளில் மிகவும் சுவையானதும், அனைவராலும் விரும்பப்படும் ஒன்றானதாகவும் இருப்பது மாம்பழம். இவ்வளவு இனிப்பான பழத்தால் ரத்த சோகையில் இருந்து விடுபட முடியும் என்றால் எதற்காக கசப்பான மாத்திரைகளை விழுங்க வேண்டும்?
3. ஆப்பிள்:
நாள்தோறும் ஒரு ஆப்பிளை நாம் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்வதை தவிர்க்கலாம் என்பது பல காலமாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு உண்மை. அந்த வகையில் பார்த்தால் தினமும் ஆப்பிள் சாப்பிடுவது ரத்த சோகை மட்டுமில்லாமல் இனி வரவிருக்கும் அனைத்து நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கக் கூடிய ஒன்றாகும்.
4.  திராட்சை:
திராட்சையில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. மாதவிலக்கு ஏற்படும் பெண்களுக்கு உடலில் தேவையான அளவு ரத்தம் உற்பத்தியாக இரும்புச் சத்து மிகவும் அவசியமான ஒன்று. புதிதாக ரத்தம் உற்பத்தி ஆகிறது என்றால் சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் நிச்சயம் உயரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
5. பீட்ரூட்:
பீட்ரூட்டில் நிறைந்திருக்கும் கார்போஹைட்ரேட் ரத்தம் வீணாவதைத் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகமாவதற்குத் தேவையான சிவப்பு ரத்த அணுக்களை இவையும் உற்பத்தி செய்கிறது. அனீமியா நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த மருந்து என்றே சொல்லலாம்.
6. துளசி: 
துளசி ரத்தத்தைத் தூய்மையாக்கி சிவப்பணுக்கள் இறப்பதற்குக் காரணமான நச்சுகளை ரத்தத்தில் இருந்து நீக்குகிறது. தினமும் துளசி சாப்பிடுவதால் நிச்சயம் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
7. காய்கறிகள்: 
பச்சை காய்கறிகளை உட்கொள்வது எப்போதும் பல நன்மைகளை வழங்கக் கூடியது. ரத்தத்தில் இரும்புச் சத்தை அதிகரித்து ரத்த சோகையில் இருந்து நம்மையும் காக்கக் கூடியது காய்கறிகள்.
8. தேங்காய் எண்ணெய்:
உடலில் திசுக்கள், சதைகள் மற்றும் ரத்தம் உற்பத்தியாகத் தேங்காய் எண்ணெய் உதவுகிறது. இதன் மூலம் ஹீமோகுளோபின் அளவு கட்டாயம் அதிகரிக்கும்.
9. முட்டை:
முட்டையில் புரதம், கொழுப்பு, வைட்டமின், இரும்பு, கால்சியம் மற்று தாது ஆகிய அனைத்துச் சத்துக்களும் இருப்பதால் இது உடலும் அதிக நன்மைகளைத் தரக்கூடியது. உடலின் ஹீமோகுளோபின் அளவு மற்றும் இல்லாமல் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சில சத்துக்களும் இதனால் அதிகரிக்கக் கூடும்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...