Monday, January 29, 2018

தங்க பதக்கம் தர மறுப்பதா? பல்கலைக்கு ஐகோர்ட் கண்டிப்பு

Added : ஜன 28, 2018 23:47

புதுடில்லி:முதல் முறை தேர்வில் பங்கேற்காததை காரணம் காட்டி, மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்க இயலாது என, பல்கலைகள் இனி கூற முடியாது.டில்லி, குருகோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலையில், 2010ல், பி.ஏ., - எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்பு படித்த ஒரு மாணவர், சின்னம்மை பாதிப்பால், இரு தேர்வுகளில் பங்கேற்க முடியவில்லை. அடுத்தாண்டு, அந்த தேர்வுகளை எழுதிய அந்த மாணவர், மொத்தத்தில் அதிக மதிப்பெண் பெற்று, பல்கலையில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.

ஆனால், முதல் முறை தேர்வில் பங்கேற்காமல், இரண்டாவது முயற்சியில் அதிக மதிப்பெண் பெற்றதால், அவருக்கு தங்கப் பதக்கம் கிடைக்காது என, பல்கலை நிர்வாகம் கூறியது.அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'முதல் முறை தேர்வில் பங்கேற்காததை காரணம் காட்டி, மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்க இயலாது என பல்கலைகள் கூறக்கூடாது' என, உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

அதிகரிக்கும் வெறிநாய்க்கடி பாதிப்புகள்! ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடிப் பிரச்னை பற்றி..

நடுப்பக்கக் கட்டுரைகள் அதிகரிக்கும் வெறிநாய்க்கடி பாதிப்புகள்! ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடிப் பிரச்னை பற்றி.. எஸ். ஸ்ரீதுரை Updated on: 24...