Friday, February 2, 2018

INCOME TAX 2019 - சம்பளதாரர்கள் ரூ.40,000 வரிவிலக்கு பெற ஆவணம், ரசீது தாக்கல் செய்ய தேவையில்லை

வருமானவரி விதிப்பு முறையில் நிலையான கழிவுத் திட்டம் கடந்த 1974-ம் ஆண்டுஅறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, மருத்துவம் மற்றும் போக்குவரத்துக்காக செலவிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகைக்கு நிலையான கழிவு என்ற அடிப்படையில் சம்பளதாரர்கள் வருமானவரி விலக்கு பெறலாம்.
எனினும், இந்தத் திட்டத்தை 2006-ல் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ரத்து செய்தார். இந்நிலையில் நிலையான கழிவுத் திட்டம் வரும் நிதியாண்டில் மீண்டும் அமல்படுத்தப்படும் என்றும் இதன்கீழ் ரூ.40 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுஷில்சந்திரா நேற்று கூறும்போது, "சம்பளதாரர்கள், ஓய்வூதியம் பெறுவோர் நிலையான கழிவுத் திட்டத்தின் கீழ், போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவை குறிப்பிட்டு ரூ.40 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம். எனினும், இதற்கு ஆதாரமாக எந்தவித ஆவணத்தையோ ரசீதையோ தாக்கல் செய்யத் தேவையில்லை. மேலும் வரி ஏய்ப்பு செய்பவர்களையும் கறுப்பு பணம் பதுக்குபவர்களையும் கண்டறிய போதுமான தொழில்நுட்பம் வருமான வரித்துறையிடம் உள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.01.2026