Friday, February 2, 2018

'ஐ போனுக்கு பதிலாக சலவை சோப்': பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மீது புகார்

Published : 02 Feb 2018 14:45 IST



மும்பையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் ஆர்டர் செய்த ஐ -போன் 8-க்கு பதிலாக சலவை சோப்புக் கட்டியை பெற்ற சம்பவம் நடந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த 26 வயதான, தாப்ரெஜ் மெகபூப் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திடம் 15-20% தள்ளுபடியில் 55,000 ரூபாய்க்கு ஒரே தொகையில் ஐபோன் 8-ஐ புக் செய்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 22-ம் தேதி அவர் ஆர்டர் செய்த ஐபோன் 8 தனியார் ஆன்லைன் நிறுவனத்திடமிருந்து டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதனை உற்சாகத்துடன் பிரித்த தாப்ரெஜ்ஜுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஐ போன் 8 அட்டை பெட்டியின் உள்ளே சலவை சோப்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார் தாப்ரெஜ்.

இது தொடர்பாக மும்பை காவல் நிலையத்தில் பிரபல தனியார் ஆன்லைன் நிறுவனம் தன்னை மோசடி செய்துள்ளதாக புகார் அளித்திருக்கிறார் தாப்ரெஜ். அவரின் புகாரை ஏற்றுக் கொண்ட மும்பை போலீஸார் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...