Friday, February 2, 2018

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் செய்யூர் மருத்துவர் மாநில அளவில் முதலிடம்

Published : 02 Feb 2018 08:44 IST

செய்யூர்



மதன்

நாடு முழுவதும் மருத்துவப் பட்டமேற்படிப்புக்கான நீட் தேர்வில் செய்யூர் மருத்துவர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள் ளார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கொஞ்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் செய்யூரில் வட்டாட்சியராக உள்ளார்.இவரது மகன் மதன், 2017-ல் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார்.

இப்படிப்பை முடித்தவுடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நுழைவுத்தேர்வு எழுதி, மருத்து வப் பட்டமேற்படிப்பில் (பொது மருத்துவம்) 15 நாட்களுக்கு முன்புதான் சேர்ந்தார். ஏற்கெ னவே நடைபெற்ற மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வையும் எழுதியிருந்தார். இதில் 1200-க்கும் 925 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலி டம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து மதன் கூறியதாவது: பட்டமேற்படிப்பு நீட் தேர்வு முடிவு கடந்த வாரமே வெளியானது. முறைப்படி தேர்வுக் குழு வெளியிட்ட பட்டியலில்தான் மாநிலஅளவில் நான் முதலிடம் பெற் றது உறுதியானது என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025