Saturday, May 19, 2018

மாவட்ட செய்திகள்

சிவகாசியில் 1 மணி நேரம் பலத்த மழை




சிவகாசியில் நேற்று பிற்பகல் 3½ மணிக்கு பலத்த காற்று வீசியது. பின்னர் சிறிது நேரத்தில் பலத்த இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது.

மே 19, 2018, 04:36 AM
சிவகாசி,

சிவகாசியில் நேற்று பிற்பகல் 3½ மணிக்கு பலத்த இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது.இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது. பயங்கர காற்று மற்றும் இடி-மின்னலுடன் மழை பெய்ததால் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. நகரின் முக்கிய பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது.

இதனால் மழைக்கு பின்னர் வாகன ஓட்டிகளும், நடந்து சென்றவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சிவகாசி நகராட்சி அலுவலகம் உள்ள இடத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. அதே போல் சிவகாசி நகராட்சி கார் ஸ்டேண்டு அருகில் தண்ணீர் பெரும் அளவில் தேங்கி நின்றது. 1 மணி நேரம் பெய்த மழையால் இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

No comments:

Post a Comment

NEWS TODAY 19.01.2026