Tuesday, May 1, 2018

நெஞ்சில் சாதிப் பெயர்: போலீஸ் வேலைக்குத் தேர்வு!


மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் நடந்த காவலர்கள் வேலைக்கான தோ்வில் பங்கேற்றவர்களின் நெஞ்சில் அவர்களது சாதிப் பெயரை எழுதியது அந்த மாநிலம் முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தார் மாவட்டத் தில் கடந்த சனி்கிழமையன்று காவலர்கள் வேலைக்கான மருத்துவ தேர்வுகள் நடைபெற்றன. அதில் பங்கேற்றவர்கள் வரிசையாக மேல் சட்டையின்றி நிறுத்தப்பட்டனர். பின்னர் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் ஸ்கெட்ச் பேனாவினால் அவர்களின் சாதிப் பெயரும் அவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதும் எழுதப்பட்டது.

இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து விசாரணைக்கு தார் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் வீரேந்திர சிங் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் பற்றி அவர் கூறுகையில், “மருத்துவப் பரிசோதனையை நடத்தியவர்கள், பங்கேற்றவர்களை வகுப்புவாரியாகப் பிரிப்பதற்காக இது போன்ற முறைகளைக் கையாண்டுள்ளனர். அவர்கள் வேறு வழிகளைக் கையாண்டிருக்கலாம் எனினும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

பாா்வை மாற வேண்டும்!

 பாா்வை மாற வேண்டும்!  ஒழுக்கம் என்று வரும்போதும் பெண்களுக்குச் சொல்லும் அறிவுரைகளை நாம் ஆண் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. 14.04.2025 கோதை ...