Wednesday, October 15, 2014

அதிவேகத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரியை, சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

சிங்கப்பூர் : அதிவேகத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரியை, சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இரண்டு நிமிடங்களில் இந்த பேட்டரி, 70 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும்; இது, 20 ஆண்டுகளுக்கு நீடித்து உழைக்கும். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், மொபைல் போன், கம்ப்யூட்டர் போன்றவற்றில், லித்தியம் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பேட்டரிகளை, அதிகபட்சம், 500 முறை ரீசார்ஜ் செய்ய முடியும்; அல்லது, அதிகபட்சம், 2 - 3 ஆண்டுகள் செயல்படும். அதற்குப் பிறகு புதிய பேட்டரிகளை விலைக்கு வாங்கி பொருத்த வேண்டும். இந்த சிரமங்களை தீர்க்கும் வகையில், சிங்கப்பூர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், புதிய பேட்டரியை கண்டுபிடித்துள்ளனர். இன்னும், 2 - 3 ஆண்டுகளில் புழக்கத்திற்கு வரவுள்ள இந்த பேட்டரி, டைட்டானியம் டைஆக்சைடு என்ற ரசாயன பசையை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கும்; இரண்டு நிமிடங்களில், 70 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றக் கூடிய இந்த பேட்டரி, அடிக்கடி ரீசார்ஜ் செய்யப்பட வேண்டிய சிரமத்தை பெருமளவு குறைக்கும். இப்போது பயன்பாட்டில் உள்ள லித்தியம் பேட்டரிகளை விட, 10 ஆயிரம் மடங்கு அதிகமாக செயலாற்றும் திறன் கொண்டது; எனினும், விலை அதிகமாகத் தான் இருக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.06.2026