Wednesday, October 15, 2014

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வுக்கு வந்த இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள்

மதுரை : மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வுக்கு வந்த இந்திய மருத்துவ கவுன்சில் நிர்வாகிகள் சர்வாதிகார போக்குடன் நடந்ததாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சங்கத் தலைவர் செந்தில் கூறியதாவது: மருத்துவமனையில் வசதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கவுன்சில் சார்பில் இரு நாட்கள் ஆய்வு நடத்தப்பட்டது. அனைத்து பிரிவுகளிலும் குழுவினர் எப்போது வருவர் என இரவு 10 மணி வரை டாக்டர்கள் காத்திருந்தனர். இதனால், நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். ஏற்கனவே நான்கு டாக்டர்கள் எம்.ஜி.ஆர்., பல்கலை விடைத்தாள் மதிப்பீட்டிற்கான பணிக்கு சென்றனர். சிலர் விடுப்பில் சென்றிருந்தனர்.

இதுதொடர்பாக பத்து டாக்டர்கள் பணியில் இல்லை எனக்கூறி பதிவேட்டில் அவர்கள் பதிவு செய்தனர். இரண்டாம் நாள் ஆய்வின் போது விடுப்பை ரத்து செய்துவிட்டு ஆறு டாக்டர்கள் ஆய்வு குழு முன் ஆஜராகி, அவர்களின் சுயஉறுதி சான்றுகளை சமர்பித்தனர். அதை ஆய்வுக் குழு ஏற்க மறுத்தது. கவுன்சிலின் இப்போக்கு கண்டிக்கத்தக்கது, என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.06.2026