Wednesday, August 2, 2017

இந்த வார விசே‌ஷங்கள் : 1–8–2017 முதல் 7–8–2017 வரை



1–ந் தேதி (செவ்வாய்) சங்கரன்கோவில் கோமதி அம்மன் கனக தண்டியலில் வீதி உலா. ராமேஸ்வரம் சுவாமி நந்தி வாகனத்திலும், அம்மன் வெள்ளி யானை வாகனத்திலும் பட்டினப் பிரவேசம்.

ஆகஸ்ட் 01, 2017, 07:30 AM 1–ந் தேதி (செவ்வாய்)

சங்கரன்கோவில் கோமதி அம்மன் கனக தண்டியலில் வீதி உலா.

ராமேஸ்வரம் சுவாமி நந்தி வாகனத்திலும், அம்மன் வெள்ளி யானை வாகனத்திலும் பட்டினப் பிரவேசம்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கக் குதிரையில் புறப்பாடு.

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.

கீழ்நோக்கு நாள்.

2–ந் தேதி (புதன்)

சங்கரன்கோவில் கோமதியம்மன் பூம்பல்லக்கு.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலை சட்டத் தேரிலும், இரவு புஷ்ப விமானத்திலும் திருவீதி உலா.

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.

சமநோக்கு நாள்.

3–ந் தேதி (வியாழன்)

ஆடிப் பெருக்கு.

சர்வ ஏகாதசி.

மதுரை மீனாட்சி அம்மன் தீர்த்தவாரி.

சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வெள்ளி வாகனத்தில் புறப்பாடு.

சமநோக்கு நாள்.

4–ந் தேதி (வெள்ளி)

வரலட்சுமி விரதம்.

சங்கரன்கோவில் கோமதியம்மன் ரத உற்சவம்.

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் கொடியேற்று விழா.

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்க பல்லக்கில் புறப்பாடு.

கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

கீழ்நோக்கு நாள்.

5–ந் தேதி (சனி)

சனிப் பிரதோ‌ஷம்.

சங்கரன்கோவில் கோமதியம்மன் விருட்ச சேவை.

சகல சிவன் கோவில்களிலும் இன்று மாலை நந்தீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.

திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்ப விமானத்தில் வீதி உலா.

கீழ்நோக்கு நாள்.

6–ந் தேதி (ஞாயிறு)

ஆடித் தபசு

சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆலயத்தில் ஆடித் தபசு, மாலை ரி‌ஷப வாகனத்தில் சங்கரநாராயண சுவாமி காட்சி தருதல், இரவு யானை வாகனத்தில் உமாமகேஸ்வரர் காட்சி தருதல்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பவித்ரோற்சவம்.

கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் ரி‌ஷப வாகனத்தில் வீதி உலா.

மேல்நோக்கு நாள்.

7–ந் தேதி (திங்கள்)

பவுர்ணமி.

மதுரை கள்ளழகர் கோவில் ரத உற்சவம்.

கீழ்திருப்பதி கல்வேங்கடேசப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, நான்கு மாடவீதி புறப்பாடு.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு.

சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

சங்கரன்கோவில் சுவாமி அம்மன் புறப்பாடு.

மேல்நோக்கு நாள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.12.2025