Saturday, August 5, 2017

அகில இந்திய மருத்துவ இடங்கள்; இன்று 2ம் கட்ட கவுன்சிலிங்

பதிவு செய்த நாள்05ஆக
2017
06:27




அகில இந்திய மருத்துவ இடங்கள், நிகர்நிலை பல்கலைகள் மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், இன்று(ஆக.,5) துவங்குகிறது.

நாடு முழுவதும் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்பட்டுள்ளன.

இதன்படி, 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 13, 14ம் தேதிகளில் நடந்தது. இதில், ஒதுக்கிய இடங்கள் போக, மீதமுள்ள, 2,660 இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

அதே போல, நிகர்நிலை பல்கலைகளில் உள்ள, 9,661 இடங்களில், முதற்கட்ட கவுன்சிலிங்கில், 8,801 பேர் இடங்கள் பெற்றுள்ளனர். இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி களில், இ.எஸ்.ஐ., தொழிலாளர் வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டில், 354 இடங்கள் உள்ளன. இதில், முதற்கட்ட கவுன்சிலிங்கில், 326 பேர் இடங்கள் பெற்றனர்.

மீதமுள்ள இடங்களுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், 'ஆன்லைன்' மூலம் இன்று துவங்கி, வரும், 7 வரை நடக்கிறது. இந்த கவுன்சிலிங்கில் இடம் பெறுவோர், வரும், 9ல் இருந்து, 16க்குள் மருத்துவக் கல்லுாரிகளில் சேர வேண்டும். மீதமுள்ள இடங்கள், ஆக., 16 மாலை, 5:00 மணிக்கு பின், மாநில ஒதுக்கீட்டு இடங்களுடன் சேர்க்கப்படும்.
-- -நமது நிருபர் -

No comments:

Post a Comment

Now, add spouse’s name to passport sans marriage cert

Now, add spouse’s name to passport sans marriage cert Neha.Madaan@timesofindia.com 10.04.2025 Pune : Citizens can now add the name of their ...