Monday, August 14, 2017

நீட் தேர்வு விலக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு
2017-08-14@ 00:33:35



கோவை: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டிற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தமுடிவு, நீட் தேர்வு எழுதிய 33 ஆயிரம் மாணவர்களின் வாழ்வில் விழுந்த பேரிடி. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தவறான முன்னுதாரணமாக அமையும். நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள். நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...