Wednesday, August 23, 2017

ஓணம் பண்டிகைக்கு ஜவுளி விற்பனை சரிவு

பதிவு செய்த நாள்22ஆக
2017
23:06


சேலம்: கேரளாவில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சேலம், ஈரோடு மாவட்டங்களில் இருந்து, 2,000 கோடி ரூபாய் மதிப்புக்கு வேஷ்டி, சேலைகள் விற்பனையாகியுள்ளன. 

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சேலம், ஈரோடு மாவட்டங்களில் தயார் செய்யப்படும், பட்டு வேஷ்டி, சேலைகள், நுால் வேஷ்டி, சேலைகள், கேரளாவுக்கு விற்பனைக்கு செல்வது வழக்கம்.

கேரளாவில் பிரசித்தி பெற்ற, ஓணம் பண்டிகை, செப்., 4ல் கொண்டாடப்பட உள்ள நிலையில், சேலம், ஈரோடு மாவட்ட ஜவுளி ரகங்களுக்கு, அங்கு மவுசு அதிகரித்துள்ளது.

கேரளாவின் முக்கிய நகரங்களுக்கு, சில நாட்களாக விற்பனைக்கு செல்லும், சேலை,வேஷ்டிகள் எண்ணிக்கைஅதிகரித்துள்ளன.
வேஷ்டிகள், 150 ரூபாய் - 1,250 ரூபாய் வரையும், சேலைகள், 270 ரூபாய் - 1,300 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது.

இதில், பட்டு வேஷ்டி, சேலைகளின் விற்பனையே அதிக அளவில் நடக்கிறது. ஓணம் பண்டிகைக்கு இன்னும், 10 நாட்களே உள்ள நிலையில், வேஷ்டி, சேலைகளின் விற்பனை மேலும்அதிகரிக்க வாய்ப்புஉள்ளதாக வியாபாரிகள்தெரிவித்தனர்.

சேலம், மொத்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:
கேரளாவில் பண்டிகை என்றாலே, சேலம், ஈரோடு மாவட்ட ஜவுளி வியாபாரிகள், உற்பத்தி யாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும்.
ரம்ஜான் பண்டிகையின் போது, விற்பனைக்கு அனுப்பப்பட்ட ஜவுளிகள் தேக்கம் அடைந்து விட்டன.

அந்த ஜவுளிகள் கடந்த ஜூலை கடைசி வரை விற்பனையானதால், ஓணம் பண்டிகை, 'ஆர்டர்' கொடுக்க வியாபாரிகள் மத்தியில் ஆர்வம் குறைந்தது.
பண்டிகை நெருங்கும் நிலையில், தற்போது ஆர்டர் கொடுத்து வருகின்றனர். கடந்தாண்டு, ஓணம் பண்டிகைக்கு, தமிழக ஜவுளிகள், 5,000 கோடி ரூபாய்க்கு விற்பனையாகின. 

இந்தாண்டு, இது வரை, 2,000 கோடி ரூபாய் ஜவுளிகள் மட்டுமே விற்பனைக்கு சென்று உள்ளன. 

மேலும், 1,000 கோடி ரூபாய் ஜவுளிகள் விற்பனையாக வாய்ப்புஉள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், விற்பனை சரிந்துள்ளது.

இவ்வாறு அவர்கூறினார்.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...